தொடரும் கொலை மிரட்டல்.. நீங்களும் பெண்தான்.. சோனியா காந்தியிடம் நியாயம் கேட்கும் கங்கனா ரனாவத்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராம் மூலம் நியாயம் கேட்டுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்
நடிகை கங்கனா ரனாவத். பாலிவுட் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பிரபல நடிகையாக உள்ளார்.
தமிழில் தாம் தூம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் நடிகை கங்கனா ரனாவத். அதன் பின் தமிழில் தலைக்காட்டாமல் இருந்த நடிகை கங்கனா ரனாவத், நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் தலைவி படத்தில் நடித்தார்.

தமிழில் தலைவி படம்..
ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான இப்படத்தில் ஜெயலலிதாவின் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கங்கனா ரனாவத். இப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத்தின் நடிப்பு பாராட்டை பெற்றது. பாலிவுட்டில் பிஸியாக உள்ள நடிகை கங்கனா, தாகட், தேஜாஸ், டிக்கு வெட்ஸ் ஷெரு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நியாயமே இல்லை
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கங்கனா, மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றது குறித்து நடிகை கங்கனா தனது இன்ஸ்டா பக்கத்தில் 'சோகம், அவமானம் மற்றும் முற்றிலும் நியாயமற்றது' என்று பதிவிட்டிருந்தார்.

ஜிகாதி தேசம்தான்..
மேலும் ரசிகர் ஒருவரின் பதிவுக்கு பதில் அளித்த நடிகை கங்கனா ரனாவத், "தெருவில் உள்ளவர்கள் சட்டங்களை இயற்றத் தொடங்கிவிட்டார்கள், பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அல்ல, இதுவும் ஒரு ஜிகாதி தேசம்தான்... இப்படி விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்றும் கூறியிருந்தார்.

கொலை மிரட்டல்
அவரது இந்த பதிவுக்கு எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு சமூக வலைதளங்களில் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில் இதுகுறித்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார். அதில் காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தியிடம் நடிகை கங்கனா ரனாவத் நியாயம் கேட்டுள்ளார்.

நேரடியாக கொலை மிரட்டல்
அவர் பதிவிட்டிருப்பதாவது, 'வேளாண் சட்டம் தொடர்பாக நான் கூறிய கருத்தை அடுத்து எனக்கு தொடர்ச்சியாக மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. பதிண்டாவைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் நேரடியாகவே கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனச் சட்டத்துக்குப் புறம்பாகவோ அல்லது எந்த சாதியினரையோ மதத்தையோ குறிப்பிட்டு நான் எதுவும் கருத்து கூறவில்லை.

நீங்களும் ஒரு பெண்தான்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, நீங்களும் ஒரு பெண்தான் உங்களது மாமியார் இந்திரா காந்தியும் ஒரு பெண்தான். ஒரு பெண்ணாக நீங்கள் இந்த அச்சுறுத்தலைப் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள உங்களது கட்சியின் அரசுக்கு உடனடியாக இதுகுறித்துத் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். பஞ்சாப் மாநிலக் காவல்துறையிலும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது ' எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











