அடேங்கப்பா கேரவனுக்காக மட்டுமே 65 லட்சம் ரூபாய் செலவா?.. வாய் பிளக்க வைத்த கங்கனா ரணாவத்
மும்பை: நடிகை கங்கனா ரணாவத் தனது கேரவன் வடிவமைப்புக்காக ரூ 65 லட்சம் செலவு செய்திருப்பது பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது
பாலிவுட் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கங்கனா ரணாவத். தனது மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசுவது அவரது இயல்பு.இதனால் அவர் ஆதரவையும், எதிர்ப்பையும் சமமாகவே சம்பாதித்திருக்கிறார்.

பாலிவுட்டின் ஸ்டார் கங்கனா ரணாவத்
2006ஆம் ஆண்டு திரையுலகில் கேங்ஸ்டர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிய முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். கங்கனா ரணாவத் நடித்த குயின் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இவர் தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். பாஜகவின் ஆதரவாளராக அறியப்படும் இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதையும் கொடுத்துள்ளது. கங்கனா ரணாவத் பாஜக ஆதரவாளர் அதனால்தான் அவருக்கு அந்த விருது கொடுக்கப்பட்டதாக விமர்சனங்களும் எழுந்தன.

இப்போதும் நடிப்பில் பிஸிதான்
கங்கனார ரணாவத் நடிப்பிலும் பிஸியாக இருக்கிறார். தமிழில் தாம் தூம் படத்தில் அறிமுகமானவர் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான தலைவி படத்தில் நடித்திருந்தார். இப்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார். சமீபத்தில்தான் அவருக்கான ஷூட்டிங் முடிந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் இந்திரா காந்த் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார் கங்கனா.

கேரவனுக்கு 65 லட்சம் ரூபாய் செலவு செய்யும் கங்கனா ரணாவத்
நடிகர், நடிகைகள் கேரவன் வைத்திருப்பது இப்போது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் அதில் கங்கனா ரணாவத் கொஞ்சம் காஸ்ட்லியாகவே இருக்கிறார். அவர் தனது கேரவனை மறு வடிவமைப்பு செய்வதற்கு 65 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்தி அனைவரையுமே வாய் பிளக்க வைத்துள்ளது.

காஸ்ட்லியான கங்கனாவின் கேரவனில் இருக்கும் சிறப்பு அம்சங்கள்
கேரவனை மறு வடிவமைப்பு செய்து அலங்காரப்படுத்த வேண்டும் என்பது கங்கனாவின் ஆசை. ஒரு வீட்டைப் போல் தனது கேரவனையும் வைத்துக்கொள்ள வேண்டுமென்பதில் ஆர்வமாக இருப்பார். அந்த கேரவனுக்குள் போடப்படும் நாற்காலிகளும், ஷோஃபாஸும் தரமான, உறுதியான மரங்கள் மூலம்தான் செய்யப்படுகின்றன.

வீட்டில் இருக்கும் உணர்வை பெற வேண்டும்
அவர் கேரவனில் இருக்கும்போது வீட்டில் இருக்கும் உணர்வை பெறுவதில் அவர் விரும்புவார். அதனால் 65 ரூபாய் லட்சம் செலவு செய்து கேரவனை மறு வடிவமைப்பு செய்தார் என அம்பானி குடும்பம் மற்றும் பல பாலிவுட் நட்சத்திரங்களுக்கு சப்ளையராக இருக்கும் கேத்தன் ராவல் தெரிவித்திருக்கிறார். இவர் மும்பை காவல் துறையிலும் பணியாற்றியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. தற்போது இந்தத் தகவல் பாலிவுட் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











