Kani Kusruti: கேரளாவின் முன்னணி இயக்குநர் பட வாய்ப்பை நிராகரித்த கனி குஸ்ருதி.. எதனால தெரியுமா?
சென்னை: கேரளாவில் அதிகமான கவனத்தை பெற்ற படம் தி கேரளா ஸ்டோரி. இந்தப் படம் கேரளாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் அதிக சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருது பெற்ற All we imagine as light படத்தில் நடித்திருந்த கனி குஸ்ருதி தி கேரளா ஸ்டோரி பட இயக்குநரின் அடுத்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தான் நிராகரித்ததாக தெரிவித்துள்ளார்.
கடந்த 14ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடந்து முடிந்துள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் பாயல் கபாடியா இயக்கிய ஆல் வி இமேஜின் இஸ் லைட் என்ற படம் கிரான்ட் பிரிக்ஸ் விருதை வென்றது. இந்த நிகழ்ச்சியில் பாயல் கபாடியாவுடன் இணைந்து பங்கேற்றிருந்தார் கனி குஸ்ருதி. இவர் இந்த நிகழ்ச்சியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிடித்திருந்த தர்பூசணி கிளட்ச் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

நடிகை கனி குஸ்ருதி: சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14ம் தேதி துவங்கி நடந்து முடிந்துள்ளது. இதில் பாயல் கபாடியா இயக்கிய ஆல் வி இமேஜின் அஸ் லைட் படம் சிறந்த படத்திற்கான கிராண்ட் பிரிக்ஸ் விருதினை வென்றுள்ளது. இந்தப் படத்தில் நடித்திருந்த கனி குஸ்ருதி, பாயல் கபாடியாவுடன் இந்த நிகழ்ச்சியில் இணைந்திருந்தார். நிகழ்ச்சியில் அவரது தர்பூசணி கிளட், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பிடிக்கப்பட்டிருந்த நிலையில், இதன்மூலம் அதிகமான சர்ச்சைகளை கனி குஸ்ருதி பெற்றிருந்தார். இந்தப் படத்தின்மூலம் சர்வதேச அளவில் இந்திய சினிமாவின் மீது உலக திரைப்பட ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.
கிராண்ட் பிரிக்ஸ் விருது: இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாயல் கபாடியா மற்றும் கனி குஸ்ருபி இருவரும் மலையாள சினிமா துறையை பாராட்டி பேசியிருந்தனர். இந்தியாவில் பல நல்ல படங்கள் வெளியாவதை சுட்டிக்காட்டியுள்ள இவர்கள், மலையாள சினிமா துறையில் வெளியாகும் படங்கள் அதிகமான கவனத்தை பெற்று வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். மலையாள படங்களின் கதைகள் அனைத்துமே தனித்துவமானவை என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். மலையாளத்தில் வெகுஜன படங்கள் மட்டும் இல்லாமல் கலைப்படங்களுக்கும் நல்ல ஆதரவு கிடைத்து வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.
கனி குஸ்ருதி பேட்டி: இந்நிலையில் தற்போது கேன்ஸ் விழாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார் கனி குஸ்ருதி, முன்னதாக பிரியாணி உள்ளிட்ட படங்களில் நடித்து அதிகமான கவனத்தை பெற்றுள்ள இவர், அடுத்ததாக தி கேரளா ஸ்டோரி இயக்குனர் சுதிப்டோ சென்னின் அடுத்த படத்திற்கான ஆடிஷனில் பங்கேற்க தனக்கு கிடைத்த வாய்ப்பை தான் மறுத்து விட்டதாக கூறியுள்ளார். தனக்கு ஒத்து வராது என்று தான் நினைக்கும் கேரக்டர்களில் நடிக்க தான் எப்போதுமே விரும்புவதில்லை என்றும் கனி தெரிவித்துள்ளார். சினிமாவில் தனக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்காத சூழலில் தற்போது ஆடிஷனில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பட வாய்ப்பை மறுத்த கனி: இந்திப் படங்களில் நடிக்க தனக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு பிடிக்காத கேரக்டர்களை நிராகரிக்க தனக்கு தற்போது வாய்ப்பு கிடைத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக முஸ்லிம்களுக்கு எதிரான கதைக்களம் என்று விமர்சிக்கப்பட்ட பிரியாணி படத்தில் விருப்பம் இல்லாமல் தான் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில் தன்னிடம் 3000 ரூபாய் மட்டுமே இருந்ததாக அப்போது பிரியாணி படத்தில் நடிக்க 70,000 ரூபாய் தனக்கு கிடைத்ததாகவும் அந்த நேரத்தில் அது மிகப்பெரிய தொகை என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











