Kaniha - மார்பக புற்றுநோய்... காரில் கதறி அழுவேன்.. எதிர்நீச்சல் கனிகா வாழ்வில் இப்படி ஒரு சோகமா?

சென்னை: Kaniha (கனிகா) எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் கனிகா அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான கனிகா தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராஃப், டான்ஸர், வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்த கனிகா தமிழிலிருந்து ஒதுங்கி மற்ற மொழிகளில் கவனம் செலுத்தினார். அதேசமயம் சச்சின், அந்நியன், சிவாஜி ஆகிய படங்களுக்கு ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுத்தார்.

Actress Kaniha Talks about her Personal Life And Her Mother

ரீ என்ட்ரி: அதனையடுத்து ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்த அவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். சீரியல் பட்டித்தொட்டியெங்கும் பிரபலம் அடைந்திருப்பதால் கனிகாவும் சினிமாவில் அடைந்த பிரபலத்தைவிடவும் சீரியல் மூலம் அதிகம் பிரபலமடைந்திருக்கிறார்.

கனிகா பேட்டி: இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "புற்றுநோய் விழிப்புணர்வு பற்றி என்னுடைய அம்மா நிறைய பேசுவார். ஆனால் அவர் அந்த விஷயத்தில் மாட்டிக்கொண்டார். அவருக்கு மார்பில் வலி இருப்பதாக ஃபோனில் எனக்கு சொன்னார். உடனே அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றோம்.

மார்பக புற்றுநோய்: அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மார்பக புற்றுநோய் இருப்பதாக கூறினர். இது எனக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. எங்களின் வாழ்க்கையில் சில நாட்களை அது அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டது. உண்மையில் நாங்கள் அதற்கு தயாராகவே இல்லை. ஆனால் அப்போது அவருடன் இருக்க முடிந்தது எனக்கு நிம்மதியாக இருந்தது. என் அம்மாவும் அதைத்தான் எதிர்பார்த்தார்.

இதைத்தான் எதிர்பார்த்தார்: அவர் எதிர்பார்த்தது எல்லாம் ஒன்றுதான். அவரது கையை பிடித்து நீ குணமாகிவிடுவாய் என்று சொல்லக்கூடிய குரல்தான் அது. ஹீமோதெரபி, ரேடியேஷன் சிகிச்சை உள்ளிட்ட பல வேதனைகளை அவர் சந்தித்தார். நான் ரொம்பவே சென்சிட்டிவ்வான ஆள். என்னுடைய எமோஷனை அவ்வளவு சீக்கிரத்தில் நான் காண்பித்துவிட மாட்டேன்.

இயற்கை குணம்: நிறைய பேருக்கு தன்னுடைய கஷ்டங்களை பிறரிடம் சொன்னால் அவர்கள் மனதில் பாரம் குறையும். ஆனால் நான் அப்படி கிடையாது. அது எனது இயற்கையான குணம். கஷ்டமான சூழ்நிலைகளை சந்தித்தால் காரில் பாடல்களை சத்தமாக ஒலிக்கவிட்டு கதறி அழுவேன். அப்படி செய்து முடித்த பிறகு நான் பலசாலி போல் உணர்வேன்.

ரொம்பவே கஷ்டம்: புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது எனது அம்மா பட்ட வேதனைகளை பார்த்து நொந்து போவேன். அவரது மார்பகத்தை பாதுகாப்பு காரணத்துக்காக வெட்டி எடுத்தார்கள். அதை பார்க்கும்போது ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனால் இதுபோன்ற தருணங்களில் கடவுளிடம் வேண்டுவது உள்ளிட்ட சில பாசிட்டிவ் விஷயங்கள் மூலம் சமாளித்துக்கொள்வேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X