5 ஸ்டார் நாயகிக்கு இன்று பிறந்த நாள்.. குவியும் வாழ்த்துக்கள் !

சென்னை : வசீகரிக்கும் கண்கள் மூலமும் அழகான நடிப்பின் மூலமும் பலவகையான குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து நம் அனைவரையும் ரசிக்க வைத்து வந்தவர் நடிகை கனிகா.

Recommended Video

Singer Kanika Kapoor tested Positive

இயக்குனர் மணிரத்னம் தயாரித்த 5 ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட கனிகா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ஜூலை 3 ஆம் தேதியான இன்று இவர் தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

பிரசன்னாவுடன் இணைந்து

பிரசன்னாவுடன் இணைந்து

தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை எடுத்து நடித்து அதில் நம் அனைவரையும் கவர்ந்து வரும் நடிகை கனிகா முதன் முதலில் தமிழில் 5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். திருட்டுப்பயலே படத்தை இயக்கிய சுசி கணேசன் இயக்கிய முதல் படமான 5 ஸ்டார் படத்தில் கனிகா பிரசன்னாவுடன் இணைந்து நடித்து அனைவரையும் முதல் படத்திலேயே கவர்ந்து இருப்பார்.

இளமை துள்ளலுடன்

இளமை துள்ளலுடன்

பிரசன்னா, கனிகா, சுசிகணேசன் என அனைவருக்கும் முதல் படமாக அமைந்த 5 ஸ்டார் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் தயாரித்திருந்தார். முற்றிலும் இளமை நிரம்பிய துள்ளலுடன் முற்றிலும் புதுமுகங்களை கொண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றத்து மட்டுமல்லாமல் சிறந்த கதாசிரியருக்கான விருதையும் பெற்றது.

அண்ணவாறு

அண்ணவாறு

இவ்வாறு தமிழில் ஒரு அழகான படத்தின் மூலம் அறிமுகமான கனிகா தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து அங்கும் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழில் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியடைந்த தளபதி திரைப்படம் கன்னடத்தில் "அண்ணவாறு" என்ற பெயரில் உருவானது. இந்தப் படத்தின் மூலம் கனிகா கன்னடத்தில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார்.

மிகப்பெரிய அங்கீகாரம்

மிகப்பெரிய அங்கீகாரம்

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வந்த கனிகாவிற்கு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தல அஜித்குமார் முதன் முதலில் மூன்று வேடத்தில் நடித்த வரலாறு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

முக்கியமான படமாக

முக்கியமான படமாக

தல அஜித்தின் திரைப்பட வாழ்க்கையில் வரலாறு ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்திருக்கும் வேலையில், இந்த படம் கனிகாவின் திரைப்பட வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒரு படமாக ஒன்றாக அமைந்தது.

ஆச்சரியப்பட வைத்தார்

ஆச்சரியப்பட வைத்தார்

வரலாறு படத்தில் இதுவரை இவர் எந்த ஒரு படத்திலும் நடித்திராத மனநலம் குன்றிய தாய் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். அஜித், கனிகா, அசின் என பலரும் இணைந்த இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

மலையாள ரசிகர்கள்

மலையாள ரசிகர்கள்

இவ்வாறு தமிழில் வரலாறு, ஆட்டோகிராப், 5 ஸ்டார் என தனது வெற்றி படங்களை அடுக்கிக் கொண்டே போன கனிகா மலையாளத்திலும் ஒரு பிரபலமான நடிகையாக வலம் வந்தார். பாக்யதேவத, பழசிராஜா, கோப்ரா, ஸ்பிரிட் போன்ற படங்கள் இவரை மலையாள ரசிகர்கள் மத்தியில் ஒரு முன்னணி கதாநாயகியாக வலம் வர வைத்துக்கொண்டிருக்கிறது.

மகிழ்ச்சியாக

மகிழ்ச்சியாக

இவ்வாறு தனது ஒவ்வொரு படங்களின் மூலமும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலமும் நம் அனைவரையும் ரசிக்க வைத்து வரும் கனிகா இன்று தனது பிறந்தநாளை வீட்டில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் கனிகா-விற்கு அவரது ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை கூறி வாழ்த்து மழையில் அவரை நனைய வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X