டுபு… டுபு... புல்லட்டில் கலக்கிய கனிகா… வியந்து பார்க்கும் ரசிகர்கள் !

சென்னை : தல அஜித்துடன் ஜோடி போட்டு, தலயுடன் நடித்த நடிகை என்ற பெருமையுடன் வலம் வருகிறார் நடிகை கனிகா.

Recommended Video

டுபு… டுபு... புல்லட்டில் கலக்கிய கனிகா… வியந்து பார்க்கும் ரசிகர்கள் !

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.

கனிகா

கனிகா

கனிகாவின் அழகான தமிழ் உச்சரிப்பும், இனிமையான குரலும் இவருக்கு தமிழ் திரையுலகில் நுழையும் வாய்ப்பை தேடித்தந்தது. இயக்குனர் சுகி கணேசன் இயக்கத்தில் உருவான ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தில் நடித்தார். காதல் திரைப்படமான இதில் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கனிகா.

பின்னணி பாடகி

பின்னணி பாடகி

பின்னணி பாடகியான கனிகா, பல நடிகைகளுக்கு பின் குரல் கொடுத்து இருக்கிறார். சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவுக்கும், அன்னியன் திரைப்படத்தில் சதாவுக்கும், சிவாஜி படத்தில் ஸ்ரேயாவுக்கு இவர் குரல் கொடுத்திருக்கிறார்.

பல மொழிகளில்

பல மொழிகளில்

தெலுங்கு, கன்னடம், மலையாள திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின. எதிரி, ஆட்டோகிராப் போன்ற திரைப்படத்தில் நடித்தார். மேலும், அஜித்துடன் இணைந்து வரலாறு திரைப்படத்தில் நடித்து தலயுடன் நடித்த நடிகை என பெயர் எடுத்தார்.

திருமணம்

திருமணம்

தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் மலையாள கரையோரம் சென்ற கனிகா அங்கு கணிசமான திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே 2008 ஆம் ஆண்டு சியாம் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த கனிகா அவ்வப்போது ஒரு சில படங்களில் நடிக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பின்

நீண்ட நாட்களுக்கு பின்

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரம் இல்லை. இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது.

புல்லட் ஓட்டும் கனிகா

புல்லட் ஓட்டும் கனிகா

அவ்வப்போது தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்து வரும் கனிகா. தற்போது, புல்லட் ஓட்டும் வீடியோவையும் புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். 39 வயதான கனிகா கெத்தா புல்லட் ஓட்டும் அழகை பார்த்து ரசிகர்கள் ரசித்து கமெண்ட்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X