பச்ச குழந்தைங்க.. அவங்கள போய் அசீங்கமா பேசுறீங்க.. கொந்தளித்த சினேகன் மனைவி!
சென்னை: பாடலாசிரியர், நடிகர், அரசியல்வாதி, பேச்சாளர் என பல திறமைகளை கொண்ட சினேகன், நடிகை கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2025ஆம் ஆண்டு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. தற்போது கன்னியாக தனது குழந்தைகள் குறித்து படுமோசமாக பேசிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுத்து இருப்பதாக கூறியுள்ளார்.
கனிகா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "என்னுடைய இன்ஸ்டாகிராம் மெசேஜில் 'விக்னராஜ்SJ' என்பவர், என்னுடைய ஒரு வயது குழந்தைகளைப் பற்றிய தவறான கருத்துக்களை பகிர்ந்திருந்தார். இதையடுத்து அவர் மீது நான் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன். அதுமட்டுமல்லாமல், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் 'child abuse' என ரிப்போர்ட் செய்தேன். தற்போது அந்த ஐடி பிளாக் செய்யப்பட்டிருக்கிறது.

கன்னிகா ரவி: இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சிவில் வழக்குகளும், கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யலாம். ஐடி சட்டத்தின் கீழ், இத்தகைய குற்றங்களுக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். இனிமேல் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து அவதூறாக பேசிவிட்டு எளிதாக தப்பிக்க முடியாது. நம்முடைய சட்டமும், அரசாங்கமும் இதுபோன்ற விஷயங்களில் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாகரீகமா பேசுங்க: அதே நேரத்தில், அரசியல் விமர்சனங்கள் செய்யலாம், அது சமுதாயத்திற்கு நல்லது. ஆனால், அது நாகரிகமாக இருக்க வேண்டும். அனைவரும் சமூகத்தின் மீது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அவருக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தையை அவரிடமிருந்து அவருடைய மனைவிதான் பாதுகாக்க வேண்டும்" என்று குழந்தைகளை மோசமாக பேசிய நபரை கன்னிகா கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், பலர் இது போன்ற செயல்கள் சமூக வலைதளங்களில் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், குழந்தைகளை பற்றிய இத்தகைய கீழ்த்தரமான கருத்துக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னிகாவிற்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











