Just In
- 22 min ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 1 hr ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 2 hrs ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 2 hrs ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'இது கலவர பூமி, பார்த்து பத்திரமா இருக்கணும்' இன்ஸ்டாவுக்கு வந்த ஹீரோயினுக்கு ஃபேன்ஸ் அட்வைஸ்!
மும்பை: இன்ஸ்டாகிராமுக்கு வந்த பிரபல ஹீரோயினை, ரசிகர்கள் ஆர்வமாக வரவேற்றுள்ளனர்.
நடிகைகளில் பெரும்பாலானவர்கள், இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளனர். வயது வித்தியாசம் இல்லாமல், முன்னாள், இந்நாள் ஹீரோயின்கள் இதைப் பயன்படுத்துகின்றனர்.
தங்களது புகைப்படங்களை இதில் பதிவிட்டு லைக்ஸ் மற்றும் கமென்ட்கள் குவிப்பது நடிகைகளின் வாடிக்கை.

பிகினி உடைகள்
சில நடிகைகள் இதில் புகைப்படங்களை பதிவிடுவதற்காகவே போட்டோஷூட் நடத்துகின்றனர். இதற்காக அவர்கள் அதிகமாகச் செலவும் செய்கின்றனர். சில முன்னணி நடிகைகள், பிகினி உடைகளில் இருக்கும் புகைப்படங்களை அதிகமாகப் பதிவிடுகின்றனர். இதில் பதிவிடுவதற்காக, வெளிநாட்டு பீச்களில் ஸ்டைலாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்கின்றனர்.

கரீனா கபூர்கான்
அந்தப் புகைப்படங்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் குவிகின்றனர். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள நடிகைகள் இன்ஸ்டாவை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். பயன்படுத்தாத நடிகைகள் ஒரு சிலர்தான். அதில் ஒருவராக இருந்தார், பாலிவுட் குயின் கரீனா கபூர்கான். சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டாமல் இருந்தார்.

பூனைக்குட்டி
இந்நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில் இன்று இணைந்தார். போட்டோ ஒன்றைப் பதிவிட்டு, கேப்ஷனாக, 'ஹலோ இன்ஸ்டாகிராம், கடைசியில் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது' என்று கூறியுள்ளார். அவர் கணக்குக்கான புளு டிக்கும் கிடைத்துள்ளது. இதுபற்றி தகவல் தெரிந்ததும் ஏராளமான ரசிகர்கள் அவரைப் பின் தொடரத் தொடங்கியுள்ளனர்.

கரீஷ்மா கபூர்
போட்டோ ஒன்றைப் பதிவிட்ட ஐந்து மணிநேரத்திலேயே இரண்டு லட்சத்துக்கும் அதிகமான லைக்குகள் அவருக்கு கிடைத்துள்ளன. அவரை பிரபல இந்தி பிரபலங்களும் வரவேற்றுள்ளனர். அவர் சகோதரி கரீஷ்மா கபூர், பாலிவுட் நடிகைகள் மலைக்கா அரோரா, ஷோபி சவுத்ரி, நடிகர் அர்ஜூன் கபூர், டிசைனர் மனீஷ் மல்கோத்ரா உட்பட பலர் வரவேற்றுள்ளனர்.

ராணி முகர்ஜி
ரசிகர்கள் பலவிதமாக கமென்ட் அடித்து வரவேற்றுள்ளனர். 'கடைசியில் எங்கள் குயின் இணைந்துவிட்டார்' என்று பலர் கூறியுள்ளனர். சில ரசிகர்கள், இதை எதிர்பார்த்தோம் என்றும் அப்படியே நம்ம ராணி முகர்ஜியையும், உங்க பிரதர், ரன்பீர் சிங்கையும் இதுல சேர சொல்லுங்களேன் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கலவர பூமி
'உங்க அழகைப் பார்த்து மற்ற நடிகைகளுக்கு பொறாமை. நீங்கதாங்க பேரழகி' என்று சில ரசிகர்கள் கூறியுள்ளனர். இன்னொரு ரசிகர், 'இது கலவர பூமி, பார்த்துப் பத்திரமா இருக்கணும், புரியுதா? என்று கிண்டலாகக் கூறியுள்ளார். நடிகை கரீனா கபூர் இதற்கு முன்பு, தனக்கு இன்ஸ்டாவில் கணக்கு இல்லை என்றும் ஆனால் ரகசிய கணக்கு ஒன்றை வைத்து கண்காணிக்கிறேன்' என்றும் கூறியிருந்தார்.