அடிபட்ட பூனையாம்ல.. பழங்கால கட்டிடத்தில் பச்சை உடையில் கரிஷ்மா.. எக்குத்தப்பாய் வர்ணிக்கும் ஃபேன்ஸ்
மும்பை: பழங்கால கட்டிடத்தின் முன் அமர்ந்தபடி நடிகை கரிஷ்மா கொடுத்துள்ள கிளாமர் போஸ் வைரலாகி வருகிறது.
'பியார் கா பஞ்சநமா 2' படம் மூலம், இந்தி சினிமாவில் அறிமுகமானவர் பிரபல மாடல் கரிஷ்மா சர்மா.
தொடர்ந்து ஹோட்டல் மிலன், சூப்பர் 30, உட்ஜா சமான் உட்பட சில படங்களில் நடித்த இவர், ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

கிளாமர் புகைப்படங்கள்
வெப் சீரிஸிலும் நடித்து வரும் இவர், சில படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடியுள்ளார். இவர் தனது சமூக வலைத்தளப் பக்கமான இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை அடிக்க்டி வெளியிட்டுவது வழக்கம். இந்தப் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் இவரது பக்கத்துக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இஸ்தான்புல்
இந்நிலையில் இவர் இப்போது துருக்கி நாட்டுக்கு சுற்றுலாச் சென்றுள்ளார். அங்குள்ள இஸ்தான்புல் நகரில் இருக்கும், சுற்றுலாத் தளமான பழங்கால கிரேக்க மாளிகைக்கு அவர் சென்றுள்ளார். அங்கு நின்றபடி அவர் ஏராளமான புகைப்படங்களை எடுத்துள்ளார். அதை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பழங்கால மேஜிக்
அதில், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பழங்கால கட்டிடத்தில் அந்த மேஜிக் இப்போதும் உயிர்ப்புடனும் துடிப்புடனும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த மாளிகையின் கதவுகளுக்குள் நுழையும்போது, பழங்காலத்தின் மேஜிக்கையும் சுற்றியிருக்கும் அழகையும் நீங்கள் உணர தயாராக இருங்கள் என்று ஆரம்பித்து ஏராளமானத் தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார்.
அடிபட்ட பூனை
அந்த மாளிகையின் உள்ளிருந்து அவர் எடுத்த மற்றொரு போட்டோவை இன்று காலை பதிந்துள்ளார். பச்சை உடையில் கூலிங் கிளாஸ் அணிந்து கிளாமராக இருக்கும் அந்தப் புகைப்படத்தில் அவர் அருகில் பூனை ஒன்றும் இருக்கிறது. அடிபட்ட பூனை நான் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

எக்குத்தப்பாக
ஏராளமான ரசிகர்கள் இதற்கு கமென்ட் அடித்துள்ளனர். அதோடு அவர் அழகையும் எக்குத்தப்பாகவும் வர்ணித்துள்ளனர். ரொம்ப நாளைக்குப் பிறகு போட்டோ போடறீங்க... அடிக்கடி போடுங்க... நாங்களும் வரணும்ல என்று சிலர் கூறியுள்ளனர். அடுத்த வெப் சீரிஸ்ல இன்னும் அதிக கிளாமரை எதிர்பார்க்கிறோம் என்று ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











