அச்சு அசல் அம்மா போலவே இருக்கும் கார்த்திகா.. கேரள பாரம்பரிய உடையில் சுண்டி இழுக்கும் போட்டோஸ்!

சென்னை: பிரபல மூத்த நடிகை ராதாவின் மூத்த மகளும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையுமான கார்த்திகா நாயர், கேரள பாரம்பரிய உடையில் இருக்கும் தனது புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக 'ஜோஷ்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்திகா நாயர். தொடர்ந்து, தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த 'கோ' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் கார்த்திகா நடித்த இந்த படம் வெற்றி பெற்றது.

Radha daughter Karthika Nair
Photo Credit:

கார்த்திகா நாயர்: அதன் பின்னர், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் 'தம்மு', மலையாளத்தில் மம்மூட்டியுடன் 'கம்மத் & கம்மத்', கன்னடத்தில் தர்ஷனுடன் 'பிருந்தாவனம்' எனப் பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தமிழில் கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' படத்தில் ஒரு புரட்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மலையாள முறைப்படி திருமணம்: அதன்பின்னர், தமிழ் சினிமாவில் சரியான படவாய்ப்புகள் அமையாததால் திரையுலகில் இருந்து சற்று விலகியிருந்த கார்த்திகா நாயர், கடந்த 2023 ஆம் ஆண்டு ரோஹித் மேனன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அழகான கடற்கரை ரிசார்ட்டில், இருவீட்டாரின் சம்மதத்துடன் மலையாள பாரம்பரிய முறைப்படி இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் இதில் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

Radha daughter Karthika Nair
Photo Credit:

இன்ஸ்டாவை உலுக்கிய போட்டோஸ்: திருமணத்திற்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கார்த்திகா நாயர், தற்போது கேரளாவின் பாரம்பரிய அடையாளமான வெள்ளை மற்றும் தங்க நிற பார்டர் கொண்ட உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கைகளில் அழகிய மருதாணி, காதுகளில் ஜும்கா, பாரம்பரிய நகைகள் மற்றும் கால்களில் கொலுசு அணிந்து அசல் கேரளாத்து மங்கையாக அவர் காட்சியளிக்கிறார். ஒரு புகைப்படத்தில் கையில் மல்லிகைப் பூவை ஏந்தி முகத்தில் புன்னகையுடனும், மற்றொரு புகைப்படத்தில் மணி பிளாண்ட் செடியை ரசித்தபடியும், மற்றொரு க்ளிக்கில் ஊஞ்சலில் அமர்ந்தவாறும் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், அச்சு அசல் அம்மா ராதாவின் சாயலிலேயே இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X