கல்யாணத்துக்கு முன்பே.. வருங்கால கணவருடன் செம ரொமான்ஸ்.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை ராதா, அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, கமல், ரஜினி, விஜய்காந்த், சத்யராஜ் என பல பிரபலங்களுடன் நடித்துள்ளார்.

Actress Karthika Nair shared a photo of Romance with her fiance

பத்து ஆண்டுகாலம் தமிழ்சினிமாவின் கனவு கன்னியாக இருந்த நடிகை ராதா , ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திகா நாயர், துளசி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

கார்த்திகா நாயர்: நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா நாயர், மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கிய கோ திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே அதிகளவிலான ரசிகர்களை பெற்ற கார்த்திகா நாயர்.

அடுத்தடுத்த படங்களில்: தனது முதல் படத்தைத் தொடர்ந்து தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்தில் மகரம்ஞ்சு, தெலுங்கில் ஜோஷ், கன்னடத்தில் பிரிந்தாவனா, ஆகியப் படங்களில் நடித்த கார்த்திகாவிற்கு சொல்லிக் கொள்ளும் வகையிலான எந்த படமும் வெற்றிப்படங்களாக அமையவில்லை. எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தின் குயிலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திகாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

செம ரொமான்ஸ்: ஒரு காலத்தில் சினிமாவை ஆட்டிப்படைத்த நடிகையின் மகளாக இருந்த போதும் எந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தராததால், நடிகை கார்த்திகா நாயர் தனது அப்பாவின் ஓட்டல் தொழிலை கவனித்து வந்த நிலையில் கடந்த மாதம் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது கார்த்திகா தனது வருங்கால கணவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியா…நடக்கட்டும் நடக்கட்டும் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X