வளர்ப்பு சரியில்லை.. பயில்வான் தாய் குறித்து பேசிய கஸ்தூரி..என்ன சொன்னார்?
சென்னை: பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் பல நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், அந்தரங்க விஷயம் குறித்து பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார். இதுகுறித்து பேசிய நடிகை கஸ்தூரி, பயில்வான் ரங்கநாதன் அசிங்கமான நாராப் பொழப்பு நடத்தி வருகிறார் என்று அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
அதில், அவருக்கும் வயிறு இருக்கிறது அதான் அப்படி பேசுகிறார். ஆனால், பிழைப்பதற்கு நாணயமான எத்தனையோ வழி இருக்கிறது. அவர் ஒரு அசிங்கமான வழியை தேர்ந்து எடுத்துள்ளார். தமிழ்நாட்டில் குறைவான விலையில் தரமான உணவு கொடுத்து பலர் சம்பாதிக்கிறார்கள். அதே போல கள்ளச்சாராயம், போதை பொருள் விற்று, ஒரு குடியை கெடுத்து சம்பாதிக்கிறார்கள். அதில், பணம் நிறைய வரலாம் ஆனால், அதெல்லாம் ஒரு பொழப்பா. அதுப்போலத்தான் பயில்வான், அவர் பூ வித்து பொழைக்கலாம், ஆனால் பீ வித்து பொழக்கிறார்.

நாராப்பொழப்பு: எத்தனையோ பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள், அவர்களில் சிலர் தான் அந்தரங்க விஷயத்தை பேசி பொழப்பு நடத்துகிறார்கள். இப்படி, மற்றவர்களின் அந்தரங்க விஷயத்தை பேசுவதே நாரப் பொழப்பு, அதை விட கேவலம் பொய் சொல்லி பொழப்பு நடத்துகிறார். இவர் அளிக்கும் பேட்டியில் ஒரு உண்மையை சொல்லிவிட்டு 99 பொய்களை சொல்லுகிறார். இதைப்பார்க்கும் மக்கள் ஏமாந்துவிடுகிறார்கள். அவர், ஒரு விஷயம் உண்மை என்பதால், எல்லாமே உண்மை என்று மக்கள் நினைக்கிறார்கள். அப்படி இல்லை, அவர் சொல்வது எல்லாமே, சுவராசியத்திற்காக புனையப்பட்ட குப்பைகள் தான்.
வம்புக்கு அலைகிறார்கள்: அவர் சொல்லும் வம்பை கேட்பதற்கு, தமிழ்நாட்டில் சில ஆட்கள் இருக்கிறார்கள். அப்படி அவர்கள் 'பீ'யை வாங்க தயாராக இருப்பதால், அவர் 'பீ' அழகாக பேக் செய்து விற்கிறார். ச்சீ... ச்சீ இது மலம் என்று மக்கள் அதை தவிர்த்துவிட்டால், பயில்வான் மாதிரி நபர்கள் பேச மாட்டார்கள். இவரைப் பார்த்து பலர் இதுப்போலத்தான் பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்கு பயில்வானை மட்டும் குத்தம் சொல்ல முடியாது, இதுபோல வம்புக்கு அலைபவர்களும் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
வளர்ப்பு சரியில்லை: உலகத்தில் எவ்வளவு நல்ல விஷயம் எல்லாம் இருக்கு எதை தேடி சென்று பார்க்காமல், யார் யாரோடு கூத்து அடிச்சா, யார் யாராட போன என்பதை தேடி தேடி பார்க்கிறார்கள், இதனால், அவர்களுக்கு நம்மைவிட மோசமானவர்கள் பலர் இருக்கிறார்கள் என்கிற அல்ப திருப்தி அடைகிறார். பயில்வான் தாய்மையை கொச்சைப்படுத்தி பேசுகிறார், அவருக்கு தாய்மையின் மகத்துவம் தெரியவில்லை, அவரின் தாய் பற்றி தவறாக நான் தவறாக பேச விரும்பவில்லை, ஆனால் அவரின் வளர்ப்பு சரியில்லை என்று கஸ்தூரி அந்த பேட்டியில் பயில்வானை கடுமையா விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











