Kathuri: பட்டுச்சேலையில் அழகு.. பேக்லெஸ் ஜாக்கெட்டில்.. இளசுகளை இம்சிக்கும் கஸ்தூரி!

சென்னை: 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்து பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜயகாந்த் எனப் பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் தான் நடிகை கஸ்தூரி. சமூக வலைத்தளங்களில் எப்போதுமே தைரியமாகத் தன் கருத்துக்களைப் பதிவிடும் குணம் கொண்டவர். இதனால் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வரும் கஸ்தூரி, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாரம்பரியமும் கவர்ச்சியும் கலந்த பட்டுச்சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

Kasthuri instagram
Photo Credit:

நடிகை கஸ்தூரி: பொதுவாக இன்ஸ்டாகிராமில் மாடர்ன் உடைகளில் வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் கஸ்தூரி, இந்த முறை பக்கா தமிழ்நாட்டுத் திராவிடப் பேரழகியாக மாறியுள்ளார். அழகான பனைமரங்கள் மற்றும் தாமரைக்குளம் போன்ற நீர்நிலையின் பின்னணியில், மனதை மயக்கும் மாலை வேளையில் இந்த ஃபோட்டோஷூட்டை நடத்திஉள்ளார். வெண்மை மற்றும் பளபளப்பான பச்சைக் கரைகொண்ட பட்டுச்சேலையை அணிந்து, அதற்குப் பொருத்தமான ஆபரணங்களை அணிந்து நளினமாக போஸ் கொடுத்துள்ளார். அவரது அந்த கள்ளச்சிரிப்பும், முகபாவனையும் 90-களின் நினைவலைகளை ரசிகர்களிடம் அப்படியே கொண்டு சேர்த்துள்ளது.

Kasthuri instagram
Photo Credit:

இம்சிக்கும் கிளாமர் ட்விஸ்ட்: இந்த போட்டோஷூட்டில், காற்றில் பறக்கும் கூந்தலோடு இயற்கையை ரசித்தபடி அவர் கண்களை மூடிப் பரவசத்தோடு கொடுக்கும் போசை பார்த்துக்கொண்டே இருக்கலாம். பட்டுச்சேலைக்கு இணையாக அவர் அணிந்துள்ள பேக்லெஸ் டிசைன் கொண்ட ஜாக்கெட்டை அணிந்து, சற்றே திரும்பி நின்று அவர் கொடுத்திருக்கும் கிளாமர் போஸ் தான் இப்போது சோசியல் மீடியாவின் ஹாட் டாபிக். அந்த போட்டோவை பார்த்தும் போது, வயது என்பது வெறும் நம்பர் தான் என்பதை நிரூபிக்கும் வகையில், இன்றும் அதே பொலிவோடும் கட்டுக்கோப்பான உடலமைப்போடும் அவர் வலம் வருவதைப் பார்த்து நெட்டிசன்கள் வியந்து போயுள்ளனர். இந்த புகைப்படங்களுக்குக் கமெண்ட் செக்ஷனில் "வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் இன்னும் குறையல" என்றும் ரசிகர்கள் லைக்குகளை வாரி இறைத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X