இப்பவும் மிஸ் மெட்ராஸ்தான்..47 வயசுன்னு சொல்லவே முடியாது.. செம்ம க்யூட் லுக்கில் நடிகை கஸ்தூரி!
சென்னை: நடிகை கஸ்தூரி ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அழகு கொஞ்சமும் குறையவில்லை என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
நடிகை கஸ்தூரி ஆத்தா உன் கோயிலிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர்கள் பிரபு, விஜயகாந்த், சத்யராஜ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான கமலின் இந்தியன் படத்தில் வயதான கமலுக்கு மகளாகவும், இளம் கமலுக்கு தங்கையாகவும் நடித்தார் கஸ்தூரி.

மிஸ் மெட்ராஸ் பட்டம்
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார் கஸ்தூரி. 1992ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டத்தை தட்டியவர் கஸ்தூரி.

வெப் சீரிஸ்கள்
தற்போதும் சினிமாவில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி, குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி வருகிறார். வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் கஸ்தூரி தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

அரசியல் விமர்சனங்கள்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி, அரசியல் சார்ந்த விமர்சனங்களை படு துணிச்சலாக முன் வைத்து வருகிறார். இதேபோல் தனது போட்டோக்களையும் வெளியிட்டு கிறங்க வைத்து வருகிறார்.

குவியும் லைக்ஸ்
மாடர்ன் டிரெஸ், சேலை, ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் என பல போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை கஸ்தூரி ஷேர் செய்துள்ள போட்டோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

கஸ்தூரி செல்பிக்கள்
அதாவது நடிகை கஸ்தூரி, டார்க் ப்ளு கலர் டாப்ஸில் படு க்யூட்டாக உள்ள செல்பிக்களை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோக்களில் சிரித்தப்படி பார்க்கவே அவ்வளவு அழகாக உள்ளார் நடிகை கஸ்தூரி.
Recommended Video

வயசே தெரியல
இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வயசே தெரியல செம க்யூட் என ஜொள்ளு விட்டுள்ளனர். மேலும் பல நெட்டிசன்கள் வயசானாலும் உங்க அழகு உங்களை விட்டு போகவில்லை, இந்தியன் படத்தில் பார்த்தது போலவே இருக்கிறீர்கள் என தெரிவித்து வருகின்றனர்.

மிஸ் மெட்ராஸ்
மேலும் பலர் இப்போதும் மிஸ் மெட்ராஸ் போன்றே இருக்கிறீர்கள் என்றும் கூறி வருகின்றனர். உங்களின் கண்கள் பேசுகிறது என்றும் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

முடிகளை நீக்கவில்லை
மேலும் அந்த போட்டோவுக்கு, நான் என் புருவங்களை ஷேப் செய்யவில்லை, அதேபோல் என் உதட்டுக்கு மேல் உள்ள முடிகளையும் நீக்கவில்லை என்று கொஞ்சம் அறியப்பட்ட அழகு டிப்ஸ் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











