twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அட பாவிங்களா.. என்னய்யா இது.. வில்லங்கமாய் வைக்கப்பட்ட விளம்பர பலகை.. இழுத்துவிட்ட கஸ்தூரி!

    |

    சென்னை: வில்லங்கமாய் வைக்கப்பட்ட ஒரு விளம்பர பலகையின் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை கஸ்தூரி.

    நடிகை கஸ்தூரி ஆத்தா உன் கோயிலிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர்கள் பிரபு, விஜயகாந்த், சத்யராஜ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

    யாருக்கெல்லாம் match ஆகுதுன்னு… Launch அன்னைக்கு பார்ப்போம்… பிக்பாஸ் சீசன் 5 !யாருக்கெல்லாம் match ஆகுதுன்னு… Launch அன்னைக்கு பார்ப்போம்… பிக்பாஸ் சீசன் 5 !

    ஷங்கர் இயக்கத்தில் வெளியான கமலின் இந்தியன் படத்தில் வயதான கமலுக்கு மகளாகவும், இளம் கமலுக்கு தங்கையாகவும் நடித்தர் கஸ்தூரி.

    மிஸ் மெட்ராஸ் பட்டம்

    மிஸ் மெட்ராஸ் பட்டம்

    தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார் கஸ்தூரி. 1992ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டத்தை தட்டியவர் கஸ்தூரி.

    வெப் சீரிஸ்கள்

    வெப் சீரிஸ்கள்

    தற்போதும் சினிமாவில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி, குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி வருகிறார். வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் கஸ்தூரி தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

    மனதில் பட்டதை பேசி

    மனதில் பட்டதை பேசி

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அதோடு அரசியல் மற்ற்ம சமூகம் சார்ந்த தனது கருத்துக்களையும் முன் வைத்து வருகிறார். பெரும் தலைவர்கள் என்றாலும் சரி உச்ச நட்சத்திரங்கள் என்றாலும் சரி மனதில் பட்டதை பட்டென பேசி வருகிறார் கஸ்தூரி.

    வாட்டர் பார்க் விளம்பரம்

    வாட்டர் பார்க் விளம்பரம்

    இதனால் சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகிறார் கஸ்தூரி. இந்நிலையில் நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ள டிவிட் ஒன்று வேற லெவலி வைரலாகி வருகிறது. அதாவது வாட்டர் பார்க் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையை ஷேர் செய்துள்ளார் கஸ்தூரி.

    பெண்களுக்கு எதுவும் கட்டாயம் இல்லை

    பெண்களுக்கு எதுவும் கட்டாயம் இல்லை

    அதில் வாட்டர் பார்க்கிற்குள் என்டர் ஆக டிரெஸ் கோட் என ஆண்களுக் பெர்முடா கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவே பெண்களுக்கு எதுவும் கட்டாயமில்லை என கொட்டை எழுத்தில் குறிப்பிட்டு பொருத்தமானதை அணியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாட்டர் பார்க் எங்கே?

    வாட்டர் பார்க் எங்கே?

    இந்த விளம்பர பலகையை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள கஸ்தூரி. இன்றைய ஃபார்வர்டு என்று பதிவிட்டு அந்த வாட்டர் பார்க் இப்போது எங்குள்ளது என்றும் கேட்டுள்ளார்.

    எதை வேண்டுமானாலும் உடுத்தலாம்

    எதை வேண்டுமானாலும் உடுத்தலாம்

    இதனை பார்த்த ரசிகர்கள், பெண்களுக்கு என எந்த உடையும் கட்டாயம் இல்லை, அவர்கள் எதை வேண்டுமானாலும் உடுத்திக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதனை பலரும் தவறாக புரிந்து கொள்வார்கள், உண்மையில் அதிலும் அப்படிதான் எழுதப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். கஸ்தூரியின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

    Read more about: kasthuri கஸ்தூரி
    English summary
    Actress Kasthuri's tweeter post goes viral on social media. She has shared a poster from a water park.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X