Kasthuri: விஜய் சொன்னது மட்டும் நடந்தா? வாயில் சர்க்கரை போடுவேன்.. கஸ்தூரி பேட்டி!
சென்னை: அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியது, அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகி உள்ளது. விஜய் சொன்னது மட்டும் நடந்தால் அவர் வாயில் நான் சக்கரை போடுவேன் என்று கஸ்தூரி பேட்டியில் பேசி உள்ளார்.
சென்னை, நந்தம்பாக்கத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் நூல் வெளியிட்டு விழாவில் பேசிய விஜய், மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத, பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத, கூட்டணி கணக்குகளை மட்டும் நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை இதுதான். கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள் என்று பேசி இருந்தார்.

சர்க்கரை போடுவேன்: விஜய்யின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி இருக்கும் நிலையில் இதுகுறித்து பேசிய நடிகை கஸ்தூரி, விஜய் சொன்னது போல நடந்தால், அவர் வாயில் சர்க்கரை போடுவேன், இவர் இப்படி சொன்னதற்கே விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாம். மேலும்,உதயநிதி சினிமா செய்தியை பார்ப்பது இல்லை என்று சொல்லி இருந்தார். நான் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தை பற்றி பேசுகிறார் என்று நினைத்துவிட்டேன். உதயநிதிக்கு மற்றவர்களை பற்றி தரக்குறைவாக பேசுவது என்பது புதுவிஷயம் இல்லை. இன்னைக்கு விஜய், ஆதவ் அர்ஜூனாவை பற்றி சொன்னார். அதற்கு முன் சனாதனத்தை பற்றி சொன்னார். அதற்கு முன் ரஜினியை பற்றி சொன்னார். இப்படி உதயநிதி திரும்பத் திரும்ப அப்படி தான் பேசுகிறார்.
என்னை திட்டினாலும் கவலையில்லை: தமிழ்நாட்டில் 60 ஆண்டு காலமாக உதய சூரியனுக்கு எதிராக இரட்டை இலை தான் இருந்தது. ஆனால் விஜய்யை முன்னிறுத்தி திமுக, அதிமுகவின் வீழ்ச்சியையும் அவர்களின் உண்மையான முகத்தையும் மறைக்கிறார்கள். இது ஒரு வியாபார தந்திரம்.தொடர்ந்து பேசிய கஸ்தூரி, சீமான் என்னை திட்டினாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை, திமுகவை வீழ்த்த அவர் கொள்கையை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரே அணியில் ஒன்றிணைய வேண்டும். மக்களின் ஒரே ஆசை திமுகவை வெளியேற்ற வேண்டும் என்பது தான். அதை திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஒரே குடையின் கீழ் சேர்ந்து செய்ய வேண்டும் என கஸ்தூரி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











