மதத்தை தவிர வேற எதுவும் தெரியாதா.. கஸ்தூரியை விளாசிய நெட்டிசன்ஸ்.. பதிலடி கொடுத்த நடிகை!
சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து, நடிகை கஸ்தூரி செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், காவி கொள்கை இருப்பவர்கள் பாஜகவிற்குத்தான் ஓட்டுப்போடுவாங்க, அவங்க ஜோசப் விஜய்க்கு ஓட்டு போட மாட்டாங்க என்று பேசி இருந்தார். இதற்கு இணையவாசி ஒருவர், மதத்தை தவிர வேற எதுவும் தெரியாதா என கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு கஸ்தூரி சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய் பிப்ரவரி 2ம் தேதி "தமிழக வெற்றி கழகம்" கட்சி குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டார். மேலும், என் சார்பில், நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலே இலக்கு என அறிவித்திருந்தார்.

கஸ்தூரி பேட்டி: இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை கஸ்தூரி, விஜய்யின் வெற்றி கழகத்தில் 'க்' இல்லை என்றாலும் அவர் வெற்றியை சரியாக பதிவு செய்துவிட்டார். என்னை மாதிரி எத்தனையோ பேர் சினிமாவில் ரசிகர்களா இருக்கிறார்கள். அப்படி ரசிகர்களாக இருப்பவர்கள் ஒட்டு மொத்தமாக ஓட்டு போட்டு இருந்தால், விஜயகாந்த் எப்போதோ முதலமைச்சராகி இருக்க வேண்டும், கமல் அவர்கள் எம்.எல்.ஏவாகி இருக்க வேண்டும். ஆனால், இது எதுவுமே நடக்கவில்லை.
காவி கொள்கை: காவி கொள்கை இருப்பவர்கள் பாஜகவிற்குத்தான் ஓட்டுப்போடுவாங்க, அவங்க ஜோசப் விஜய்க்கு ஓட்டு போட மாட்டாங்க. இவருக்கு மைனரிட்டி தான் ஸ்ட்ராங். இதில் திமுக, காங்கிரஸ் கட்சிக்குத்தான் மைனரிட்டியினரின் ஆதரவு அதிகம். இவர் காங்கிரசைத்தான் கபளீகரம் செய்யப்போகிறார் என்று நடிகை கஸ்தூரி அந்த பேட்டியில் பேசி இருந்தார்.
சரியான பதிலடி: அந்த பேட்டியில் கஸ்தூரி ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு பேசியது குறித்து ட்விட்டர் இணையவாசி ஒருவர், உனக்கு எல்லாம் மதத்தை தவிர வேறு எதுவுமே தெரியாதா என பதிவிட்டிருந்தார். நெட்டிசனின் இந்த பதிவால் கடுப்பான கஸ்தூரி, விஜய்யை ஜோஸப் என குறிப்பிடும் கட்சியினர் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அரசியல் உண்மையை சொல்லியிருக்கேன். என் சொந்த கருத்தை அல்ல. திமுக கூட்டணிக்கு பாதிப்புன்னு சொன்ன உடனே உ.பி கழிசடைங்க எப்படியெல்லாம் மூட்டி விடுதுங்க பாரேன். பொய்யை மட்டும் தான் பேசுவீங்களாடா? என்று சரியான பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











