கும்பமேளாவில் குளித்த கஸ்தூரி.. கூடவே மகனும் இருக்காரே.. தைப்பூசம் போஸ்ட்.. ஒரே பக்திமயம் தான்!

சென்னை: 50 வயதை கடந்த நடிகை கஸ்தூரி தனது மகனுடன் மகா கும்பமேளாவில் குளித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டு ரசிகர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Kasthuri Shankar Mahakumbh 2025 heroine 2025

முருகனுக்கு உகந்த நாளான தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று முருகனின் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார் கஸ்தூரி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் 1991ம் ஆண்டு வெளியான 'ஆத்தா உன் கோயிலிலே' படம் மூலம் அறிமுகமானவர் தான் கஸ்தூரி.

Kasthuri Shankar Mahakumbh 2025 heroine 2025

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாகவும் தங்கையாகவும் இவர் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

Kasthuri Shankar Mahakumbh 2025 heroine 2025

பச்சைக்கிளிகள் தோளோடு: இந்தியன் படத்தில் இடம்பெற்ற "பச்சைக்கிளிகள் தோளோடு" பாடலை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சேனாபதி ஊழல்வாதிகளை களையெடுக்க முக்கிய காரணமாகவே அவரது மகளின் மரணம் அமைந்திருக்கும். ராசாத்தி வரும் நாள், கவர்மெண்ட் மாப்பிள்ளை, சின்னவர், செந்தமிழ்ப்பாட்டு, ராக்காயி கோயில், புதிய முகம், அமைதி படை, வாட்ச்மேன் வடிவேலு, காதல் கவிதை, தோஸ்த், தமிழ்ப்படம் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

Kasthuri Shankar Mahakumbh 2025 heroine 2025

டாப்லெஸ் போட்டோஷூட்: நடிகை கஸ்தூரி கடந்த 2014ம் ஆண்டு டாப்லெஸ்ட் போட்டோஷூட்டை ஒரு மேகஸினுக்காக நடத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதன் பின்னர் போல்டாக நடிக்க ஆரம்பித்த அவர் தற்போது அரசியல் விவாதங்களில் அதிகளவில் பங்கேற்று தனது கருத்துக்களை இந்தியளவில் முன் வைத்து வருகிறார்.

Kasthuri Shankar Mahakumbh 2025 heroine 2025

கும்பமேளாவில் குளியல்: கடவுள் பக்தி அதிகம் கொண்ட நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பல்வேறு கோயில்களுக்கு சென்று வந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், மகா கும்பமேளாவுக்கு சென்றுள்ள அவர் அங்கே குளியல் போட்ட புகைப்படங்களை வரிசையாக அடுக்கி ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.

Kasthuri Shankar Mahakumbh 2025 heroine 2025

மகனுடன் குளியல்: பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் கஸ்தூரி மகா கும்பமேளாவில் தனது மகன் சங்கல்ப் ரவிக்குமாருடன் சேர்ந்து குளியல் போட்ட போட்டோ ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். கஸ்தூரியின் குளியல் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு ராயர் பரம்பரை, ஸ்டிரைகர் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்த இவர், கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான சிம்பா படத்திலும் நடித்திருந்தார். சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார்.

Kasthuri Shankar Mahakumbh 2025 heroine 2025

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X