படுக்கைக்கு அழைத்த இயக்குநர்.. வெளுத்துவிட்ட நடிகை கஸ்தூரி.. செம சம்பவம்

சென்னை: சினிமாவில் காலங்காலமாக பெண்களுக்கு ஆண்களால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. சமீபத்தில்கூட கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டியின் அறிக்கை அந்த மாநிலத்தின் திரைத்துறையில் எவ்வளவு அட்டூழியங்கள் நடந்திருக்கின்றன என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. அதனைத் தொடர்ந்து தமிழிலும் அப்படி ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் நடிகை கஸ்தூரி பேசியிருக்கும் விஷயம் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் கஸ்தூரி. அமைதிப்படை, சின்னவர், செந்தமிழ் பாட்டு, புதிய முகம் என ஏராளமான படங்களில் நடித்தவர். மேலும் இந்தியன் படத்தில் கமல் ஹாசனுக்கு மகளாக நடித்திருந்த கஸ்தூரிக்கு நாளடைவில் சினிமா வாய்ப்புகள் குறைந்தன. அதனைத் தொடர்ந்து சின்னத்திரையிலும் தோன்றினார். இப்போது பல யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்துவரும் அவர்; சினிமா துறையில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

kasthuri tamil cinema kollywood

கஸ்தூரியின் பேட்டி: இதுகுறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் தமிழில் நடித்த இரண்டாவது படத்தின் இயக்குநர் என்னை படுக்கைக்கு அழைக்க முயன்றார். அது எனக்கு வருத்தத்தை கொடுத்தது. அவர் அப்படி பேச ஆரம்பிக்கும்போதே என்னிடம் அந்த இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறார் என்பது எனக்கு தெளிவாக புரிந்துவிட்டது. நான் எதையுமே யோசிக்காமல் அந்த இடத்திலேயே அவரை அசிங்கமாக திட்டி அவரின் மானத்தை வெளுத்து வாங்கிவிட்டேன்.

முயற்சிகள் நடந்தன: நான் அப்படி பேசியதை அடுத்து என்னை அந்தப் படத்திலிருந்து தூக்குவதற்கான காரணத்தை தேடிக்கொண்டிருந்தார்கள். கடைசியாக நான் ஒல்லியாக இருக்கிறேன் என்று சொல்லி அந்தப் படத்திலிருந்து தூக்கிவிட்டார்கள். இந்தக் காரணத்தை என்னிடம் சொன்னவுடன் நானும், என்னுடன் இருந்தவர்களும் பலமாக சிரித்துவிட்டோம். ஏனெனில் ஆடிஷன் நடக்கும்போதே நாம் என்ன மாதிரியான தோற்றத்தில் இருக்கிறோம் என்பனவற்றை பார்த்துதான் கமிட் செய்வார்கள்.

ஒத்துக்கொண்டிருப்பேன்: அப்படி இருக்கும்போது அவர் என்னை வேண்டுமென்றே படத்திலிருந்து தூக்குவதற்காக இப்படி ஒரு காரணத்தை சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு நடிக்க வரவில்லை, நடனம் ஒழுங்காக ஆட வரவில்லை என்று சொல்லியிருந்தால்கூட அதை நான் ஒத்துக்கொண்டிருப்பேன். ஆடிஷன் நடந்தபோது நான் ஒல்லியாக இருந்தேன் என்பது அந்த இயக்குநருக்கு தெரியவில்லையா. ஷூட்டிங்கில் முதல் ஷெட்யூல் முடிந்த பிறகுதான் அவருக்கு தெரிந்ததா?

முகத்தை பார்க்க முடியவில்லை: அவர் என்னை படுக்கைக்கு அழைத்தபோது நான் அவரிடம் நடந்துகொண்ட விதத்தை நினைத்து அவரால் என்னை பார்க்க முடியவில்லை என்பதுதான் உண்மையான காரணம். அதனை என்னால் புரிந்துகொள்ளவும் முடிந்தது. என்னுடைய குடும்பத்தில் அனைவருமே நல்ல வசதி படைத்தவர்கள்தான். என்னுடைய அம்மா ஒரு வக்கீல். இப்படி ஒரு ஸ்ட்ராங்கான இடத்திலிருந்து வந்த எனக்கே இப்படி நடந்தால்.; சினிமாவை வைத்துதான் சாப்பிட வேண்டும் என்ற நிலையில் திக்கற்று வரும் பெண்களுக்கு என்ன நிலையென்று யோசித்து பாருங்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X