வேட்டி எப்படி அவிழாமல் நிற்குது....போட்டோஷூட் பார்த்து அரண்டுபோன நடிகை கஸ்தூரி

சென்னை : நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.

அவர் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு அப்டேட்களை அளித்து வருகிறார்.

இந்நிலையில் திருமண போட்டோஷுட்டின் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவர் அதுகுறித்து கமெண்ட் செய்துள்ளார்.

நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி தமிழில் 1990களில் முன்னணி நடிகையாக இருந்தவர். கமல், பிரபு, விஜயகாந்த் எனற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார். இந்த நேரத்தில் திருமணமாகி செட்டில் ஆனார்.

கேரக்டர் ரோல்கள்

கேரக்டர் ரோல்கள்

தற்போது சினிமாவில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். மேலும் டிவி தொடர்கள், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு தன்னுடைய இருப்பை மிகவும் சிறப்பாக காட்டி வருகிறார்.

வெளிப்படை கருத்துக்கள்

வெளிப்படை கருத்துக்கள்

சினிமா, அரசியல், சமூகம் என அனைத்து விஷயங்களிலும் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். தன்னுடைய பிட்னசையும் சிறப்பாக பராமரித்து வருகிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய பிட்னஸ் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் பாதம் பாடலுக்கு இவரது நடனம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

சமீபத்தில் தெலுங்கு படத்தில் டப்பிங் செய்த புகைப்படத்தையும் மகிழ்ச்சியுடன் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த ப்ராஜக்ட்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கல்யாண போட்டோஷுட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் வித்தியாசமான வகையில் போட்டோஷுட் நடத்தப்பட்டுள்ளது.

தலைகீழாக நின்ற மாப்பிள்ளை

தலைகீழாக நின்ற மாப்பிள்ளை

அதில் தகிட ததிமி என்ற கமலின் பாடல் பின்புலத்தில் இசைக்க, மாப்பிள்ளை தலைகீழாகவும் மணப்பெண் ஆடியபடியும் காணப்படுகிறார். இவ்வாறு வித்தியாசமான வகையில் அந்த போட்டோஷுட் உள்ளது. மேலும் மணமக்களுக்கு பின்புறத்தில் நிறைய பேர் குதிப்பது போலவும் அவர்கள் முன்நிற்பது போலவும் வித்தியாசமான வகையில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

தாறுமாறு கேள்வி கேட்ட கஸ்தூரி

தாறுமாறு கேள்வி கேட்ட கஸ்தூரி

இந்நிலையில் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கஸ்தூரி, வேட்டி எப்பிடி அவிழாம அப்பிடியே நிக்குது? அதுதான் நம்ம கேள்வி ! ஹைய்யோ ஹைய்யோ ! என்று ட்வீட் செய்துள்ளார். அவரின் இந்த நகைச்சுவை பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Recommended Video

கல்லூரி மாணவிகளுடன் டேன்ஸ் ஆடிய கஸ்தூரி | Tamil Filmibeat
அப்படியே நின்ற வேட்டி

அப்படியே நின்ற வேட்டி

கஸ்தூரி கேட்பது போல தலைகீழாக நிற்கும் மாப்பிள்ளையின் வேட்டி அப்படியே நிற்கிறது. புகைப்படக்காரர்கள் போட்டோ எடுக்க சில நிமிடங்களை எடுத்துக் கொள்கின்றனர். அதுவரை அவர் அப்படியே தலைகீழாக நிற்கிறார். அவரது வேட்டி அவரது சொல்பேச்சை கேட்கிறது. நமக்கும் கஸ்தூரியின் கேள்வியையே ரிபீட் கேட்கத் தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X