ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? அஜித் விஜய் ரசிகர்களை வச்சு வாங்கும் நடிகை!
சென்னை: டிவிட்டரில் மோசமான ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து வரும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை பிரபல நடிகை விளாசியுள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களும் இவர்கள் தான்.
இவர்கள் இருவரும் தாங்கள் நல்ல நண்பர்கள்தான் என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வருகின்றனர். ஆனால் அவர்களின் ரசிகர்கள் அதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை.

நண்பர் அஜித்
அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் மோதல் சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் விஸ்வரூபமெடுத்து வருகிறது. மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்ச் விழாவில் கூட கோட் சூட்டில் பங்கேற்ற நடிகர் விஜய், நண்பர் அஜித் போல உடை உடுத்தியிருப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து நண்பர் அஜித் என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டானது.

நலம் விசாரித்த அஜித்
தற்போது நடிகர் விஜயின் மகன் சஞ்சய் கொரோனா பாதிப்பால் கனடாவில் தனியாக சிக்கி தவிப்பதாக தகவல் வெளியானது. இதனால் நடிகர் விஜய் கவலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித், விஜயிடம் போனில் சஞ்சய் குறித்து நலம் விசாரித்ததாக தகவல் வெளியானது.

பழிக்கு பழியாக
இந்நிலையில் வரும் மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதனை குறிப்பிட்டு படு மோசமான ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்ய தொடங்கினர் விஜய் ரசிகர்கள். இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள், விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதியை குறிப்பிட்டு பழிக்கு பழியாக ஒரு ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

நடிகை கஸ்தூரி விளாசல்
ரகம் ரகமாக ட்ரென்ட்டாகும் மோசமான ஹேஷ்டேக்குகள் மற்றும் கமெண்ட்டுகளால் திக்குமுக்காடி வருகிறது டிவிட்டர் தளம். இதனை பார்த்த நடிகை கஸ்தூரி, மோசமான ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து வரும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை விளாசியுள்ளார்.

திருந்துங்க பிரதர்ஸ்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும். இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை; ஆனா அவமானம். ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ். நெட்டிவிட்டியை விடுங்க.. வாழு வாழ விடு.. என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











