அசிங்கத்தை மிதிக்க வேண்டாம்னு தள்ளி நடக்கிறோம்… பயில்வான் ரங்கநாதனை விளாசிய கஸ்தூரி!
சென்னை : நடிகை கஸ்தூரி பயில்வான் ரங்கநாதனை சகட்டுமேனிக்கு திட்டித்தீர்த்து ஒரு ட்விட்டை பதிவிட்டுள்ளார்.
பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் பத்திரிக்கையாளர் குறித்தும் பல நடிகைகள் குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்து டென்ஷனான கஸ்தூரி, அவர் மீது வழக்கு தொடர பத்திரிகையாளர்கள் மற்றும் நடிகர்களின் ஆதரவை கோரி உள்ளார்.

பயில்வான் ரங்கநாதன்
தமிழில் சினிமாவில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட நடிகர், நடிகைகளை விமர்சனம் செய்து மிகவும் பிரபலமானார். குறிப்பாக அவர்களின் அந்தரங்க விஷயங்களை பக்கத்தில் இருந்து பார்த்தது போல தனது யூடியூப் சேனலில் பேசிவருகிறார். இதனால்,பல நடிகர், நடிகைகள் இவரை படுமோசமாக விமர்சித்தும் தொடர்ந்து அப்படியே பேசிவருகிறார்.

வாய்க்கு வந்தபடி
தனுஷ்,ஐஸ்வர்யாக பிரிவு குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், இருவர் மீது பல சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினார். இதற்கு பல கண்டனங்கள் எழுந்தாலும் தனது யூடியூப் சேனலுக்காக வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்.

லெஃப்ட் அண்ட் ரைட்
சமீபத்தில் ராதிகா சரத்குமார் குறித்தும் விஜய்காந்த் குறித்தும் பேசி வம்பில் மாட்டிக்கொண்டார் பயில்வான் ரங்கநாதன். திருவான்மியூர் பீச்சில் தற்செயலாக பயில்வானை சந்தித்த ராதிகா அவரை அந்த இடத்திலேயே வைத்த லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார். இது கோலிவுட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

விளாசிய கஸ்தூரி
தற்போது, பயில்வான் ரங்கநாதன் லட்சுமி ராமகிருஷ்ணன்,கஸ்தூரி, ஓவியா மற்றும் பத்திரிக்கையாளர்கள் என அனைவரையும் ஒட்டுமொத்தமாக விமர்சனம் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு, கண்டனம் தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பயில்வான் ரங்கநாதனை விளாசி உள்ளார்.

அது பயம் இல்லை
அந்த ட்விட்டர் பதிவில், அசிங்கத்தை மிதிக்க கூடாதுன்னு தள்ளி நடக்கிறோம், அது பயம் இல்லை. கண்ட நாயோட எதுக்கு வம்புன்னு பாத்தேன்...இந்த முழு பொய்யனை இனியும் சும்மா விட்டா பெத்த அம்மாவையே கூட தப்பா பேசுவான். வழக்கு வரும், பத்திரிகையாளர்கள் மற்றும் நடிகர், நடிகையின் ஆதரவை கோருவதாக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











