காவிக்கொள்கை உடையோர் ஜோசப் விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள்.. நடிகை கஸ்தூரி பேட்டி!

சென்னை: விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்த நிலையில், விஜய்யின் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டப்பட்டு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை கஸ்தூரி செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மேலும், என் சார்பில், நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலே இலக்கு என அறிவித்திருந்தார். பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட விஜய், அரசியல் கட்சி துவங்கியதை தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

actress kasturi talks about vijay tamilaga vetri kazhagam

கஸ்தூரி பேட்டி: இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேட்டி அளத்துள்ள கஸ்தூரி, விஜய்யின் வெற்றி கழகத்தில் 'க்' இல்லை என்றாலும் அவர் வெற்றியை சரியாக பதிவு செய்துவிட்டார். என்னை மாதிரி எத்தனையோ பேர் சினிமாவில் ரசிகர்களாக இருக்கிறார்கள். அப்படி ரசிகர்களாக இருப்பவர்கள் ஒட்டு மொத்தமாக ஓட்டு போட்டு இருந்தால், விஜயகாந்த் எப்போதோ முதலமைச்சராகி இருக்க வேண்டும், கமல் அவர்கள் எம்.எல்.ஏவாகி இருக்க வேண்டும். ஆனால், இது எதுவுமே நடக்கவில்லை. ஒவ்வொருத்தருக்கும் அவ்வளவு பிரச்சனை இருக்கிறது. மாசம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, பத்தாயிரம் ரூபாய்க்கு தலையில் சுமையை ஏற்றி வைத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் ரொம்ப கஷ்டப்படுறாங்க.

காவி கொள்கை: அடுத்து எப்போது விடிவு நமக்கு கிடைக்கப்போகிறது. யார் நமக்கு உண்மையாக நமக்காக உழைப்பார்கள் என மக்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அதில் விஜய் அவர்கள் எந்த இடத்தில் இருப்பார் என்று அவரே இதுவரை சொல்லவில்லை. எனக்கு தெரிந்து பாதிப்பு இல்லாத ஒரு கட்சி, விஜய்யின் அறிக்கைபடி அது பாஜக தான். காவி கொள்கை இருப்பவர்கள் பாஜகவிற்குத்தான் ஓட்டுப்போடுவாங்க, அவங்க ஜோசப் விஜய்க்கு ஓட்டு போட மாட்டாங்க. இவருக்கு மைனாரிட்டி தான் ஸ்ட்ராங். இதில் திமுக, காங்கிரஸ் கட்சிக்குத்தான் மைனாரிட்டியினரின் ஆதரவு அதிகம். இவர் காங்கிரசைத்தான் கபலிகரம் செய்யப்போகிறார் என்று நினைக்கிறேன். அந்த கூட்டணியில் இருப்பவர்கள் தான் சமூக நீதி கூட்டணி இவர், அங்கே தான் கை வைக்கப்போகிறார் என்று நடிகை கஸ்தூரி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X