Katrina kaif: ரொம்ப கஷ்டமா இருந்தது.. விஜய் சேதுபதியிடம் தமிழ் கற்ற கத்ரினா கையிப்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கையிப் இணைந்து நடித்துள்ள படம் மெர்ரி கிறிஸ்துமஸ். இந்தப் படம் இன்னும் சில தினங்களில் தமிழ் மற்றும் இந்தியில் ரிலீசாகவுள்ளது. படத்தை பிரபல திரில்லர் பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இவர் தமிழர் என்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின்மூலம் தமிழ் படத்தை இயக்கும் தன்னுடைய கனவு நனவாகியுள்ளதாக அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம் லவ் மற்றும் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான அந்தாதுன் படம் திரில்லர் வகையாறாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது முன்னதாக வெளியான படத்தின் டிரெயிலர் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கையிப்பின் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தி மற்றும் தமிழில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் இரு பதிப்புகளிலும் அந்தந்த மொழிகளின் நடிகர்கள் நடித்துள்ளனர்.

Actress Katrina kaif reveals how she learned Tamil language from Vijay Sethupathi

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி, கத்ரினா கையிப் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் இன்னும் சில தினங்களில் அதாவது ஜனவரி 12ம் தேதி பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது. தமிழில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகவுள்ள கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்களுடன் விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் படமும் மோதவுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்திலேயே கிறிஸ்துமஸ் செலிபிரேஷனாக இந்தப் படம் வெளியாகவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மெர்ரி கிறிஸ்துமஸ் படம்: விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டிய ஷாருக்கானின் ஜவான் படம் கடந்த ஆண்டில் வெளியாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் அவர் கத்ரினாவுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் கத்ரினாவுடன் இணைந்தது குறித்து நம்பவே தனக்கு சில காலங்கள் பிடித்ததாக தற்போது விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். படம் தமிழில் வெளியாகவுள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விஜய் சேதுபதி, கத்ரினா கையிப் மற்றும் ஸ்ரீராம் ராகவன் ஆகியோர் கலந்துக் கொண்டு பல சுவாரஸ்யங்களை பகிர்ந்தனர்.

Actress Katrina kaif reveals how she learned Tamil language from Vijay Sethupathi

சென்னை பிரஸ்மீட்: நிகழ்ச்சியில் சிறப்பான காஸ்ட்யூமில் கத்ரினா கையிப் கலந்துக் கொண்டு அனைவரையும் கவர்ந்தார். மீண்டும் சென்னைக்கு வந்துள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். தெலுங்கு படத்தில் நடித்துள்ள அவர் இந்தப் படத்தின்மூலம் தமிழிலும் அறிமுகமாகவுள்ளார். மேலும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ரீராம் ராகவனுடன் இணைந்தது மிகவும் உற்சாகமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். முன்னதாகவே மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள கத்ரினா கையிப் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

விஜய் சேதுபதிக்கு பாராட்டு: முன்னதாக படத்திற்கான பிரமோஷனில் பேசிய கத்ரினா கையிப், விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளினார். அவர் தன்னுடைய செயல்களை மிகவும் நேர்மையாகவும் பயம் இல்லாமலும் செய்து வருவதாகவும் தெரிவித்திருந்ததார். மேலும் வாழ்க்கை குறித்து தனிப்பட்ட பார்வையை அவர் கொண்டுள்ளதாகவும் பாராட்டியிருந்தார். இந்த குணங்களே அவரது படங்களிலும் எதிரொலிப்பதாகவும் கத்ரினா பாராட்டியிருந்தார். அவர் நமக்கெல்லாம் பொக்கிஷம் போன்றவர் என்றும் பாராட்டியிருந்தார். இந்நிலையில் தற்போது சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தான் விஜய் சேதுபதியிடம் தமிழ் கற்றதாக கூறி, ரொம்ப கஷ்டமாக இருந்தது என்ற வார்த்தையை கஷ்டமாக பேசிக்காட்டினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X