Just In
- 31 min ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- 1 hr ago
பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி!
- 1 hr ago
இந்த பிக் பாஸ் சீசனை கெடுத்ததே இவங்கதான்.. அர்ச்சனாவை குற்றம்சாட்டும் நெட்டிசன்கள் ஏன்?
- 2 hrs ago
பிக்பாஸ் வீட்டில் ஆரியிடம் பேசியது என்ன? சுரேஷ் தாத்தா டிவிட்ட பாருங்க மக்களே!
Don't Miss!
- News
வங்கி மோசடி வழக்கை மூடி மறைக்க லஞ்சம்: சிக்கிய சிபிஐ அதிகாரிகள் சஸ்பெண்ட்
- Automobiles
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சுறாவுடன் நீந்தியா கத்ரீனா கைஃப்.. மெர்சலான வீடியோ.. வாய் பிளந்த ரசிகர்கள் !
மும்பை : சுறாவை பார்த்தால் அனைவரும் பயந்தோடும் நிலையில் பாலிவுட் நடிகை ஒருவர் சுறாவுக்கு இணையாக நீந்தியவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவிற்கு அனைவரும் இப்போது லைக்குகளையும் கமெண்டுகளையும் இஷ்டம் போல் சும்மா தெறிக்க விடுகின்றனர்.
நீச்சல் உடையில் சுறாவுடன் சுழன்று சுழன்று நீந்தியவாறு வெளியிட்டுள்ள அந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்சரியத்துடன் ரசித்து வருகின்றனர்.
மாயத் திருடன்.. மந்திர புன்னகையாளன்.. மனங்களை கொள்ளையடித்த கேப்டன்.. ஹேப்பி பர்த்டே #JohnnyDepp

முன்னணி இடம்
பளபளக்கும் முகம் அசர வைக்கும் உயரம் என பார்ப்போரை தனது ஆளை கொள்ளும் அழகாலும் அசர வைக்கும் உயரத்தாலும் அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப். பாலிவுட்டில் பல ஆண்டுகளாக முன்னணி நாயகியாக இன்றும் வலம் வந்து கொண்டிருக்கும் இவர் கிசுகிசுக்கு சற்றும் பஞ்சமில்லாதவர். இவர் பல முன்னணி நடிகர்களுடன் அவ்வப்போது கிசுகிசுவில் சிக்குவது உண்டு, ஆனால் அதை பற்றியெல்லாம் காதில் போட்டு கொள்ளாமல், அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்றவாறு துடைத்து போட்டு விட்டு அடுத்த வேலைக்கு சென்று விடுவார்.

பிளாக்பஸ்டர் நாயகி
பாலிவுட்டில் முதன் முதலாக பூம் என்ற படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்த இவர் முதல் படத்திலேயே அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்து பிளாக்பஸ்டர் கொடுத்தவர் அப்போது ஆரம்பித்த பிளாக்பஸ்டர் லிஸ்ட் இன்று வரையிலும் அவரது வாழ்க்கையில் சர்வ சாதாரணமாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

துணிச்சல்
தனது ஹாட்டான வீடியோக்களையும் புல்லரிக்கும் புகைப்படங்களையும் எப்போதும் சமூக வலைதளங்களில் அலைய விடும் இவர் அதற்காக பல லட்சம் ரசிகர்களையும் பெற்று வெற்றியுடன் வலம் வருகிறார். இந்நிலையில் இவர் யாரும் செய்ய துணியாத செயல் ஒன்றை துணிச்சலோடு செய்து ரசிகர்களின் பாராட்டை அள்ளி வருகிறார்.

விஜய் படம் அல்ல
இவர் சுறாவுடன் நீச்சலில் போட்டியிடும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது, நீங்கள் நினைக்கின்ற மாதிரி விஜய் படம் சுறா இல்லை இது நிஜ சுறாமீன். சுறா மீனை கண்டால் அனைவரும் தெறித்து ஓடும் நிலையில் இவர் அசால்டாக அதனுடன் நீச்சல் போட்டியில் ஆடி பாடி வருகிறார்.

ஆச்சர்யம்
இந்த வீடியோவை பார்த்து அனைவரும் வாய் மேல் விரல் வைத்தபடி என்னம்மா நீந்துராங்கடா கொய்யாலே என ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். படங்களில் ஆக்சனில் தூள் கிளப்பும் இவருக்கு சுறாவுடன் நீந்துவது எல்லாம் சூப்பு குடிப்பது போன்ற சாதாரண விஷயம் என்று சொல்லி வருகின்றனர்.

பாராட்டுக்கள்
மிகவும் வியக்கத்தக்க ஒரு நண்பனுடன் இந்தக் கடலில் ஒரு அழகான நாள் என பதிவிட்ட தலைப்பிட்ட இந்த வீடியோவை பார்த்த பல ரசிகர்களும் அதேசமயம் பல திரை பிரபலங்களும் பாராட்டி வரும் நிலையில் நடிகர் ரித்திக் ரோஷன் இந்த வீடியோவை பார்த்து வெரி கூல் என காத்ரினாவை பாராட்டியுள்ளார். அதேசமயம் ஒரு சிலர் இந்த வீடியோவை பார்த்துவிட்டு மிகவும் அழகாக உள்ளது, ஆனாலும் கொஞ்சம் பார்க்க பயமாகவும் உள்ளது என பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.