Kayadu lohar: எனக்கு கொடுத்தத திருப்பி கொடுப்பேன்.. டிராகன் நடிகை கயாடு லோஹர் நெத்தியடி பதில்!
சென்னை: நடிகை கயாடு லோஹர் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப் படங்களில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். விட்டு வைப்பார்களா கோலிவுட் இயக்குநர்கள், தமிழில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து டிராகன் படம் மூலம் என்ட்ரி கொடுக்கவுள்ளார் கயாடு லோஹர். படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார்.
இந்தப் படம் வரும் 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் சிம்பு பாடியுள்ள ஏன்டி விட்டுப் போன என்ற பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகை கயாடு லோஹர்: நடிகை கயாடு லோஹர் சமீபத்தில் அதிக கவனத்தை தென்னிந்திய மொழிப் படங்களில் பெற்று வருகிறார். தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப் படங்களில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள், இயக்குநர்களுடன் இணைந்து நடித்துவரும் கயாடு, தமிழில் டிராகன் படம் மூலம் தன்னுடைய என்ட்ரியை துவங்கியுள்ளார். பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். படம் வரும் 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
டிராகன் படம்: படத்தின் பாடல்கள், டிரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கு மிகப்பெரிய கவனத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. படத்தில் கல்லூரி மாணவராக பிரதீப்பும் அவருக்கு வில்லனாக மிஷ்கினும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெயிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. படத்தில் கல்லூரி மாணவராக இவர் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில் நேற்றைய தினம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், கயாடு லோஹர் உள்ளிட்டவர்கள் இணைந்திருந்தனர்.
டிராகன் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி: நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின் தான் கெட்ட வார்த்தை பேசவில்லை என்று கூறியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து தான் ஒரு வருடத்திற்கு பொது நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்று நினைத்ததாகவும் ஆனால் இந்த நிகழ்ச்சியில் கல்பாத்தி அகோரம், பிரதீப் ரங்கநாதன் மற்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து என மூன்று பேருக்காக மட்டுமே பங்கேற்றதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் பிரதீப்பை புரூஸ்லி என்றும் அவர் அடுத்ததாக அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் நடிக்க வேண்டும் என்றும் கூறினார். தொடர்ந்து அவர் 200 ஆண்டுகாலம் வாழ வேண்டும் என்றும் தற்போதுள்ள மனநிலையிலேயே அவர் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
கயாடு லோஹர் நெகிழ்ச்சி: இதைக் கேட்டு கண்கலங்கிய பிரதீப், அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகி கயாடு லோஹர், தனக்கு தமிழ் சினிமா மற்றும் ரசிகர்கள் குறித்து எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். இந்தப் படத்தில் நடித்ததன்மூலம் தமிழ் மக்கள் அதிகமான அன்பை காட்டுவதை தான் உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அன்பிற்கு நன்றி கூறிய கயாடு லோஹர், இந்த அன்பை தான் தனக்குள்ளேயே வைத்துக் கொள்வேன் என்றும் தன்னுடைய படங்கள் மூலம் அதை வெளிப்படுத்துவேன் என்றும் மேலும் கூறியுள்ளார். சரியாக தமிழை உச்சரிக்க முடியாத நிலையிலும் தமிழில் அவர் கொஞ்சிக் கொஞ்சி பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


Click it and Unblock the Notifications











