விரைவில் அம்மாவாகப் போகும் பிரபல நடிகை… வாழ்த்தும் ரசிகர்கள் !

சென்னை : நடிகை கயல் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

கயல் ஆனந்தி கடந்த ஜனவரி மாதம் இணை இயக்குனர் சாக்ரடீசை திடீரென திருமணம் செய்து கொண்டார்.

தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் இவருக்கு விரைவில் வளைகாப்பு நடைபெற உள்ளதாம். திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றதால் வளைகாப்பு நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக நடத்த திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அறிமுகம்

அறிமுகம்

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள தலைமுறை நடிகைகளில் ஒரு சில நடிகைகள்தான் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். ஆந்திர மாநிலம் தெலுங்கானாவை சேர்ந்தவர் ஆனந்தி. இவர் முதன் முதலில் தெலுங்கில் 2012 ஆம் ஆண்டு வெளியான "ஈ ராஜூலு" என்ற பதில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும், தமிழில் 2014 ஆம் ஆண்டு "பொறியாளன்" என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கயல் ஆனந்தி

கயல் ஆனந்தி

அதன் பின்னர் பிரபுசாலமன் இயக்கத்தில்இ தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான கயல் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் சந்திரன், ஆனந்தி ஆகியோர் ஹீரோ ஹீரோயினாக நடித்தனர். இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு கயல் ஆனந்தி என்று பெயர் வந்தது. அந்த படத்திற்கு பிறகு, த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது.

அழகான நடிப்பு

அழகான நடிப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ஜோதி மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் ஆழகாக நடித்திருந்தார். இப்படம் கதிருக்கும், கயல் ஆனந்திக்கும் பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது. மேலும், இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது.

கமலி From நடுகாவேரி

கமலி From நடுகாவேரி

கயல் ஆனந்தி கடைசியாக கமலி From நடுகாவேரி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாநகரங்கள், நகரங்களில் பிறந்து வளர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகளுக்குக் கிடைக்கும் வசதி, வாய்ப்பு சிறு ஊர்களில், கிராமங்களில் படிக்கும் மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும். இப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

ஒரு சில படங்களில்

ஒரு சில படங்களில்

அலாவுதினின் அற்புத கேமரா, டைட்டானிக் கப்பலும் கவுந்து போகும், ஏஞ்சல், யுகி என்ற தமிழ் திரைப்படத்திலும், ஸ்ரீதேவி சோடா சென்டர் என்ற தெலுங்கு திரைப்படத்திலும், மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

கயல் ஆனந்தி கர்ப்பம்

கயல் ஆனந்தி கர்ப்பம்

இந்நிலையில்,நடிகை கயல் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 4 ஆண்டுகளாக காதலித்த இணை இயக்குனர் சாக்ரடீசை கடந்த ஜனவரி மாதம் இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தற்போது கயல் ஆனந்தி 7மாத கர்ப்பாக இருப்பதாகவும் அவருக்கு விரைவில் வளைகாப்பு நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பரவி வரும் இந்த தகவல் குறித்து கயல் ஆனந்தி தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. ரசிகர்கள் கயல் ஆனந்திக்கு மாறி மாறி வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X