அசால்டா புல்லட்டில் ரைடு போன பிரபல நடிகை… வைரலாகும் வீடியோ !
சென்னை : தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நடித்து பிரபலமான நடிகை கீர்த்தி பாண்டியன் புல்லட் ஓட்டும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் தான் கீர்த்தி பாண்டியன்.
அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகை என்ற விருதை பெற்றார்.

ரீஎண்ட்ரி
ஊமை விழிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண்பாண்டியன். இவர் நடிகர் மட்டுமல்ல தயாரிப்பாளர் , விநியோகஸ்தர் என பன்முகத் தன்மைக் கொண்டவர். பல ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த இவர் அன்பிற்கினியாள் படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

அட்வென்சர் மூவி
அருண்பாண்டியனுக்கு 3 மகள்கள். அவரது 2வது மகள் தான் கீர்த்தி பாண்டியன். இவர் ஹரீஷ் ராம் இயக்கத்தில் உருவான தும்பா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். காமெடி கலந்த ஒரு அட்வென்சர் படம் என்பதால் குழந்தைகள் இப்படத்தை விரும்பி ரசித்தனர்.

பிரபலமானார்
அன்பிற்கினியாள் படத்தின் மூலம் அனைவரும் உற்று நோக்கும் நடிகையாக மாறிய கீர்த்திபாண்டியன். தனது அப்பா அருண்பாண்யனுடன் இணைந்து நடித்தார். அப்பாவும் மகளும் இணைந்து நடித்தது தான் அன்பிற்கினியாள் படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்தது. மலையாளத்தில் ஹிட்டடித்த ஹெலன் படத்தின் ரீ மேக் தான் அன்பிற்கினியாள்.
Recommended Video

புல்லட் ரைடு
கீர்த்தி பாண்டியன் ராயர் என்பீல்டு புல்லட்டில் கெத்து காட்டி பக்காவாக ஒரு ரைடு போய் உள்ளார். இணையத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள கீர்த்திப்பாண்டியன், மிகவும் துணிச்சலான பெண் தான் என்று கூறி அனைவரும் பாராட்டி வருகின்றனர். வலைத்தளத்தில் இந்த வீடியோ டிரெண்டிங்காகி வருகிறது.


Click it and Unblock the Notifications











