“என்ன வேணும் உனக்கு“ கீர்த்தி பாண்டியனின் சூப்பர் போஸ்.. குவியும் லைக்ஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், கீர்த்தி பாண்டியன். ஊமை விழிகள், இணைந்த கைகள் திரைப்படத்தில் நடித்த முன்னணி நடிகரான அருண் பாண்டியனின் மகளான இவர், தும்பா படம் மூலம் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்தார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது அட்டகாசமான போட்டோவை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

தும்பா படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்த கீர்த்தி பாண்டியன் அந்த படத்தை தொடர்ந்து, அன்பிற்கினியால் என்ற படத்தில் தனது அப்பா அருண்பாண்டியனுடன் சேர்ந்து நடித்தார். அந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இவர், தனது தந்தை வைத்திருந்த தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வந்தார். கீர்த்தி பாண்டியன் முதன் முதலாகசவாலே சமாளி என்ற படத்தை தயாரித்தார். இதில், அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருந்தார். அசோக் செல்வனும் கீர்த்தி பாண்டியனும் 10 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், காதலை பெற்றோரிடம் சொல்லி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர்களின் திருமணம் நடைபெற்றத. கோலிவுட் திரையுலகினுரு திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இவர்களின் திருமணம் நடந்தது.

Keerthi pandian instagram
Photo Credit:

நடிகை கீர்த்தி பாண்டியன்: திருமணத்திற்கு முன் அசோக் செல்வனுடன் சேர்ந்து ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இருவரும் ஜோடி போட்டு நடித்தனர். கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட இந்த படம், கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது, கீர்த்தி பாண்டியன், ஏபி குரூப்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அஃகேனம்' நடித்துள்ளார். இதில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் உதய் இயக்கியுள்ள இப்படத்துக்கு பரத் வீரராகவன் இசையமைத்துள்ளார். ஜூலை 4-ம் தேதி தியேட்டரில் வெளியாக படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அட்டகாசமான போட்டோஸ்: இந்நிலையில், நடிகை கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முதல் மரியாதை ராதா ஸ்டைலில் விதவிதமான போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்கள் இணையத்தில் தற்போது, டிரெண்டாகி வருகிறது. டஸ்கி கலரில் அந்த உடைக்கும், லைட்டுக்கும் சும்மா உச்சு கொட்டும் அளவிற்கு இருக்கிறது. கீர்த்தி பாண்டியனின் போட்டோ, மேலும், அந்த போட்டோவிற்கு 'காதல் கொண்டேன்' என கேப்ஸன் போட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் நானும் காதல் கொண்டேன் என கருத்துக்களை பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X