Keerthy pandian: கை நிறைய வளையல்.. கீர்த்தி பாண்டியன் வீட்டில் விசேஷமா?
சென்னை: நடிகர், இயக்குநர் அருண்பாண்டியனின் மகளான நடிகை கீர்த்தி பாண்டியன். தும்பா படம் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவல், தற்போது, கை நிறைய வளையல் போட்டு இருக்கும் அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
இயக்குநர் ஹரீஷ் ராம் இயக்கத்தில் 2019ம் ஆண்டு தர்ஷன், கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியானத் திரைப்படம் தான் தும்பா. காட்டில் இருந்த தாய் புலி, தனது குட்டியுடன் வழி தவறி வேறு பகுதிக்கு வந்துவிடுகிறது. அந்த புலியை அதன் இடத்தில் கொண்டு சென்று சேர்ப்பது தான் படத்தின் கதை. அந்த படத்தை தொடர்ந்து, அன்பிற்கினியால் என்ற படத்தில் தனது அப்பா அருண்பாண்டியனுடன் சேர்ந்து நடித்தார். அந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

நடிகை கீர்த்தி பாண்டியன் நடிகை மட்டுமில்லாமல், தந்தை வைத்திருந்த தயாரிப்பு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். கீர்த்தி பாண்டியன் முதன் முதலாக சவாலே சமாளி என்ற படத்தை தயாரித்தார். இதில், அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருந்தார். அசோக் செல்வனும் கீர்த்தி பாண்டியனும் 10 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், காதலை பெற்றோரிடம் சொல்லி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர்களின் திருமணம் அருண்பாண்டியனின் சொந்த ஊர் நடைபெற்றது.
நடிகை கீர்த்தி பாண்டியன்: திருமணத்திற்கு முன் அசோக் செல்வனுடன் சேர்ந்து ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்தார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட இந்த படம், கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது, கீர்த்தி பாண்டியன், ஏபி குரூப்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அஃகேனம்' படத்தில் நடித்துள்ளார். இதில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் உதய் இயக்கியுள்ள இப்படத்துக்கு பரத் வீரராகவன் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த வாரம் வெளியாகி ஜூலை 4-ம் தேதி தியேட்டரில் வெளியாக கலவையான விமர்சனத்தை பெற்றது.
விசேஷமா? : நடிகை கீர்த்தி பாண்டியன் இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கிறார். தற்போது, இவர் கை நிறைய வளையல் போட்டு,அழகான புடவையில் பார்ப்பவர்கள் அசந்து போகும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த பலர், வளையல் போட ஆசைவந்துவிட்தா என்றும், கீர்த்தி பாண்டியன் வீட்டில் விசேஷமா? என கேட்டு வருகின்றனர். இந்த போட்டோவிற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











