Keerthi suresh: சினிமாவில் 10 ஆண்டுகள் நிறைவு.. அம்மாவிற்கு கீர்த்தி சுரேஷ் செய்த செயல்!
திருவனந்தபுரம்: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது பாலிவுட்டிலும் நடிக்க கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியுள்ளார். அடுத்ததாக வருண் தவானுடன் இணைந்து VD18 படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனிடையே கீர்த்தி சுரேஷ் சினிமாவில் நடிக்க துவங்கி 10 ஆண்டுகளை பூர்த்தி செய்ததை தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டிலும் வருண் தவான் ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். VD18 படத்தில் வருண் தவானுடன் இணைந்து நடிக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் மாமன்னன் என்ற படத்தில் உதயநிதியுடன் இணைந்து நடித்திருந்தார் கீர்த்தி. இதேபோல தெலுங்கில் அவரது நடிப்பில் தசரா, போலா ஷங்கர் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.
அடுத்தடுத்த படங்கள்: அடுத்தடுத்து சைரன், ரகு தாத்தா, கண்ணிவெடி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளை கடந்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு வெளியான பைலட்ஸ் என்ற மலையாள படத்தின்மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கீர்த்தி. கடந்த 2013ம் ஆண்டில் வெளியான கீதாஞ்சலி படம் மூலம் நாயகியாகவும் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படத்தை பிரியதர்ஷன் இயக்கியிருந்தார்.
தமிழில் என்ட்ரி: தொடர்ந்து தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் என்ட்ரி கொடுத்த கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ரஜினி முருகன், தொடரி, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகா நடி இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது.
10 ஆண்டுகள் நிறைவு: இந்நிலையில் தான் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 10 ஆண்டுகள் பூர்த்தியானதையொட்டி கடந்த மாதத்தில் அவர் தன்னுடைய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் அவர் சினிமாவில் நடிக்கத் துவங்கி 10 ஆண்டுகள் பூர்த்தியானதையொட்டி கேக் வெட்டி குடும்பத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமான அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அம்மாவிற்கு கீர்த்தி செய்த செயல்: இதனிடையே இந்த புகைப்படங்களில் தன்னுடைய அம்மா மேனகாவிற்கு கீர்த்தி சுரேஷ் செருப்பு மாட்டிவிடும் புகைப்படம் அதிகமான அளவில் லைக்ஸ்களை பெற்று வருகிறது. தான் பெரிய நடிகையாக இருந்தாலும் தன்னுடைய அம்மாவிற்கு தான் மகள்தான் என்பதை அவர் நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தில் அழகான உடையுடன் கீர்த்தி சரேஷ் காணப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











