கீர்த்தி சுரேஷ் கல்யாணம்.. கன்பார்ம் செய்த நடிகை.. வேண்டிக்கறதுக்காக எங்க போயிருக்காங்க தெரியுமா?

திருப்பதி: நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக பேபி ஜான் படம் மூலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். தெறி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்த படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள பேபி ஜன் படத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் காம்பினேஷனில் பாடல் ஒன்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அடுத்த மாதம் கோவாவில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

keerthi suresh baby john movie antony thattil

நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்/ தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழில் ரகு தாத்தா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலான இந்த கதைக் களத்தில் கீர்த்தி சுரேஷ் சிறப்பாகவே தன்னை இணைத்திருந்தார். இருந்தபோதிலும் படத்தின் கதைக்களம் மற்றும் திரைக்கதை ஆகியவை ரசிகர்களை கவர தவறியது.

பேபி ஜான் படத்தில் கீர்த்தி: இந்நிலையில் அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக காணப்பட்டார். விரைவில் இந்த படம் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்த மாதம் கீர்த்தி சுரேஷின் முதல் பாலிவுட் என்ட்ரி படம் ரிலீசாகவுள்ளது. தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்த தெறி படத்தை அட்லி பாலிவுட்டில் தயாரித்துள்ளார். காலீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

கீர்த்தியின் கவர்ச்சி ஆட்டம்: தமிழில் சமந்தா நடித்திருந்த கேரக்டரில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தால் ரசிகர்களை தாக்கியிருந்தார். ரசிகர்கள் வைப் செய்யும் வகையிலான இந்த பாடல் சில ரசிகர்களை முகம் சுளிக்கவும் வைத்திருந்தது. தமிழில் குடும்பப்பாங்கான கதைக்களங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டிற்கு என்ட்ரி தந்தவுடன் அதற்கேற்றார் போல தன்னை மாற்றிக் கொண்டதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடக்க உள்ளதாக கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் கூறப்பட்டது.

திருமணத்தை உறுதி செய்த கீர்த்தி: கீர்த்தியின் திருமணத்தை அவரது அப்பாவும் உறுதி செய்த நிலையில் இன்றைய தினம் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ், தன்னுடைய திருமணம் குறித்து பேசியுள்ளார். தன்னுடைய அப்பா, அம்மா உள்ளிட்டவர்களுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்த மாதம் தன்னுடைய படம் ரிலீசாகவுள்ளதாகவும் மேலும் தன்னுடைய திருமணம் கோவாவில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காகவே திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து கீர்த்தி சுரேஷின் திருமணம் தற்போது அவரோலேயே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பல பிசினஸ்களை செய்து வரும் ஆண்டனி தட்டில் கீர்த்தி சுரேஷை மணக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X