ஸ்கூல் ட்ரெஸ்ஸில் க்யூட் போட்டோ வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. குவியும் லைக்ஸ்!

சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தமிழிலும் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தற்போது இவரது கைவசம் மாமன்னன், ரகு தாத்தா, சைரன் போன்ற படங்கள் உள்ளன. தொடர்ந்து தமிழ், தெலுங்குப் படங்களில் கமிட்டாகி வருகிறார் கீர்த்தி.

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழிலும் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரது அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தந்து வருகின்றன.

மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ்

மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ்

தமிழில் விஜய்யுடன் இவர் நடித்த பைரவா, சர்க்கார் படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தன. தொடர்ந்து தனுஷுடன் தொடரி, உள்ளிட்ட படங்களிலும் நடித்து தன்னை சிறப்பாக வெளிப்படுத்தினார் கீர்த்தி. தற்போது உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் வடிவேலு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

தமிழில் அடுத்தடுத்த படங்கள்

தமிழில் அடுத்தடுத்த படங்கள்

இந்தப் படத்தை தொடர்ந்து ரகு தாத்தா, சைரன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அஜித்தின் ஏகே62 படத்திலும் இவர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து தன்னுடைய பிட்னஸ் வீடியோக்கள், போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது இந்த வீடியோக்களுக்கு ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ் கொடுத்து வருகின்றனர். ஏராளமான ரசிகர்கள் கீர்த்தியை பாலோ செய்து வருகின்றனர்.

கீர்த்தியின் பள்ளிக்கால புகைப்படம்

கீர்த்தியின் பள்ளிக்கால புகைப்படம்

இந்நிலையில் சமூக வலைதளங்களில் கீர்த்தி சுரேஷின் பள்ளி கால புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் அவர் மிகவும் க்யூட்டாக காணப்படுகிறார். இந்த புகைப்படங்களை பலரும் ஷேர் செய்துவரும் நிலையில், அதிகமான லைக்ஸ்சும் கிடைத்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X