Just In
- 6 hrs ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 6 hrs ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 6 hrs ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- 7 hrs ago
கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…
- News
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..!
- Automobiles
நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொரோனா நேரத்துல ஓரே ஒரு ஃபோன் கால்தான்... அந்த ஹீரோவுடன் நடிக்க, உடனே ஓகே சொன்ன கீர்த்தி சுரேஷ்!
சென்னை: பிரபல ஹீரோவுடன் நடிக்க, ஒரே ஒரு போன் காலில் ஓகே சொல்லி இருக்கிறார், நடிகை கீர்த்தி சுரேஷ்.
விக்ரம் பிரபுவின், 'இது என்ன மாயம்' படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.
பிறகு, விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார்.
குவாரண்டினும்.. கே.எஸ். ரவிக்குமாரும்.. முத்து மட்டுமல்ல.. இந்த படங்களையும் பார்க்கலாம்!

தேசிய விருது
அவர், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் அவர், முன்னாள் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையான, நடிகையர் திலகம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி. இதில் நடிப்பதற்காக, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகினார்.

இந்தி மைதான்
மலையாளத்தில் மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் என்ற படத்திலும் இன்னும் சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையே, இந்தியில் மைதான் என்ற படத்திலும் அவர் ந்ஒப்பந்தம் ஆனார். இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கைக் கதை இது. இதில், அஜய் தேவகன், ஹீரோ. அவர் மனைவியாக, கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகக் இருந்தது.

விலகினார்
படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். சில நாட்கள் இதன் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் உடல் எடையை மிகவும் குறைத்ததால், ஒல்லியாகக் காணப்பட்டார். இதனால் அந்தப் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில் இப்போது தெலுங்கில் டாப் ஹீரோவான மகேஷ்பாபு ஜோடியாக அவர் நடிக்க இருக்கிறார். அனில் ரவிபுடி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த சரிலேரு நீக்கெவரு படம் கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆனது.

பரசுராம்
இந்தப் படம் ஹிட் ஆனதை அடுத்து, பரசுராம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் மகேஷ்பாபு. கொரோனா அச்சுறுத்தல் முடிந்த பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில் நடிக்க ஹீரோயின் தேடி வந்தனர். மகேஷ்பாபு ஜோடியாக இதற்கு முன் யாரும் நடிக்காத நடிகையாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னாராம். இதையடுத்து, நடிகை கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க முடிவு செய்தனர்.

போனில் ஓகே சொன்னார்
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், சினிமா பிரபலங்களும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதையடுத்து போனில் கீர்த்தி சுரேஷிடம் இயக்குனர் பேசினார். அப்போது கதையின் அவுட்லைனை அவர் சொல்லி இருக்கிறார். அதைக் கேட்டதும் கீர்த்தி நடிக்க ஓகே சொல்லிவிட்டதாக டோலிவுட்டில் கூறப்படுகிறது. இதில் கிளாமருக்கு இன்னொரு ஹீரோயினும் இருக்கிறாராம்.