Actress Keerthi suresh: திருமணத்திற்கு தயாரான கீர்த்தி சுரேஷ்.. கோவாவில் திருமணமா?
திருவனந்தபுரம்: நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி படங்களில் தன்னை இணைத்து வருகிறார். அடுத்ததாக தமிழிலும் பாலிவுட்டிலும் அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு தயாராகியுள்ளன. சமீபத்தில் வெளியான ரகு தாத்தா படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா படத்தை மிகப்பெரிய அளவில் கீர்த்தி சுரேஷ் எதிர்பார்த்துள்ளார்.
இந்த படத்தில் அதிரடி ஆக்சனிலும் அவர் ஈடுபட்டுள்ளது சமீபத்தில் வெளியான டீசரில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் அடுத்த மாதத்தில் தன்னுடைய திருமணத்தை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் தமிழில் ரிலீசாகி வருகின்றன. சமீபத்தில் ரகு தாத்தா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றநிலையில் அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதே போல இந்தியிலும் தெறி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள படத்தில் சமந்தா ரோலில் நடித்து முடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த படம் அடுத்த மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்?: இதற்கான பிரமோஷன்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதத்தில் திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தீயாக தகவல்கள் பரவி வருகின்றன. மிகவும் பிரம்மாண்டமாக இந்த திருமணம் கோவாவில் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் கீர்த்தி சுரேஷ் குடும்பத்தினர் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய கீர்த்தி சுரேஷ் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் படங்களில் நடிப்பாரா என்பது குறித்து தற்போது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அடுத்தடுத்த வதந்திகள்: இதனிடையே, இந்த தகவல்களுக்கு கீர்த்தி சுரேஷ் பதிலெதிவும் கூறவில்லை. முன்னதாகவும் கீர்த்தியின் திருமணங்கள் குறித்து பல முறை பல வதந்திகள் பரவின. முன்னதாக கேரளாவின் அரசியல்வாதியின் மகனை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்பட்டது. தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல இசையமைப்பாளர் அனிருத்தை கீர்த்தி திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு அவரது அப்பா விளக்கம் கொடுத்திருந்தார். இதையடுத்து இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அடுத்தடுத்த படங்கள்: இந்நிலையில் தற்போது மீண்டும் கீர்த்தியின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தை நட்சத்திரமாகவே மலையாள படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், கடந்த 2013ம் ஆண்டில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தின்மூலம் மலையாளத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து ரிங் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார். இதையடுத்து தமிழில் இது என்ன மாயம் படத்தின்மூலம் அறிமுகமானவர், ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்தகூட்டம் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார். இவரது நடிப்பில் அண்ணாத்த, ரகு தாத்தா படங்களும் வெளியாகின.


Click it and Unblock the Notifications











