கீர்த்தி சுரேஷின் 13 வருட காதல்.. யார் அந்த காதலன்.. வெளியான பரபரப்பு தகவல்!

நடிகை கீர்த்தி சுரேஷ் ரிசார்ட் உரிமையாளரை காதலித்து வருவதாக ஒரு தகவல் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் ரிசார்ட் உரிமையாளரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மேக்னாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ்.

வாரிசு நடிகையான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல முன்னணி நடிகர்களுடன் ரவுண்டு கட்டி நடிந்து வந்தார். ஆனால் சமீபகாலமாக இவருடைய படங்கள் எதுவும் வெற்றி பெறாத காரணத்தினால் மார்க்கெட்டை இழந்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக பைலட் என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வந்தார். அதன் பிறகு அச்சநேயனெனிக்கிஷ்டம், குபேரன் போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தி சுரேஷ், தமிழில்'இது என்ன மாயம்' என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

மனம் கவர்ந்த நடிகை

மனம் கவர்ந்த நடிகை

அதைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ,விஜய்யுடன் சர்க்கார் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து தமிழக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தார். அந்த படத்தில் கீர்த்தி நடித்தார் என்பதை விட சாவித்திரியாகவே வாழ்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

கதைகளுக்கு முக்கியத்துவம்

கதைகளுக்கு முக்கியத்துவம்

சாவித்திரியாக கீர்த்தி சுரேஷை, அந்த பெண்ணுக்கு என்ன நடிக்க தெரியும் என ஏளனமாக பேசியவர்களின் வாயை அடைக்கும் வகையில் அந்த படத்தில் கச்சிதமாக நடித்து தேசிய விருதை வென்றெடுத்தார். நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடித்த சாணிக்காயிதம் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அந்த படத்தில் இவரின் நடிப்பு மிரட்டும் வகையில் இருந்தது.

ரிசார்ட் ஓனருடன் காதலா?

ரிசார்ட் ஓனருடன் காதலா?

நடிகை கீர்த்தி சுரேஷிற்கு படவாய்ப்பு குறைந்துள்ளதால், அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், கடந்த 13 ஆண்டுகளாக ரிசார்ட் உரிமையாளர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல்கள் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுவும் வதந்தியா?

இதுவும் வதந்தியா?

ஆனால்,கீர்த்தி சுரேஷ் காதலிக்கும் அந்த ரிசார்ட் ஓனர் யார்? என்று எந்த தகவலும் தெரியாததால், இது உண்மையான தகவலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சமீபகாலமாக நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து சில தகவல்கள் வெளியாகி அது வதந்தியாக மாறிய நிலையில், இந்த தகவலும் அதே போல் வதந்தியாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X