Keerthi suresh: ஏன் இப்படியெல்லாம் பண்றா.. பொண்டாட்டி மாதிரியே பேசினாரு.. சீக்ரெட் சொன்ன கீர்த்தி!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டிலும் படங்களில் கமிட்டாகி வருகிறார். தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்த கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா உள்ளிட்டவர்களுடன் இணைந்து தொடரி, பைரவா, சர்க்கார், ரெமோ, அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முன்னதாக நடிகை சாவித்ரியின் பயோபிக்கில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது.

சமீபத்தில் தமிழில் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் படத்தில் நடித்திருந்தார் கீர்த்தி. இந்தப் படமும் இவருக்கு சிறப்பாக அமைந்தது. மேலும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தசரா படமும் நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் கீர்த்தி. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். அடுத்தடுத்த போட்டோஷுட்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் என இன்ஸ்டாகிராம் பக்கத்தை கலர்புல்லாக வைத்து வருகிறார். இதனால் இவரை 17 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகின்றனர்.

Actress Keerthi suresh on her fans in her interview

நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் அறிமுகமான துவக்கத்திலேயே நடிகை சாவித்ரியின் பயோ பிக்கில் நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தவர். இதன்மூலம் தேசிய விருதுக்கு சொந்தக்காரர் ஆனவர். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக பாலிவுட்டிலும் என்ட்ரி ஆகவுள்ளார். தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின்மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். விஜய், ரஜினிகாந்த், தனுஷ், சூர்யா உள்ளிட்டவர்களுடன் நடித்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்: தமிழில் தற்போது ரகு தாத்தா, சைரன் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். விரைவில் ரகு தாத்தா படம் ரிலீசாகவுள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சமீபத்தில் கலைஞர் 100 நிகழ்ச்சியிலும் சிறப்பான வகையில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் கீர்த்தி. சமீபத்தில் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த கீர்த்தி சுரேஷ், சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார். இவரது அடுத்தடுத்த இன்ஸ்டாகிராம் பதிவுகள் இவருக்கு 17 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொடுத்துள்ளது.

ஏராளமான ரசிகர்கள்: தன்னுடைய படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் தன்னுடைய ரசிகர்கள் குறித்து அவர் தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களையும் பேசியுள்ளார். தன்னை திருமணம் செய்துக் கொள்ள கேட்டு, அடிக்கடி ரசிகர் ஒருவரிடம் இருந்து கடிதம் வந்துக்கொண்டே இருந்ததாகவும் அதில் பேர், அட்ரஸ் எல்லாம் போட்டே வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல தன்னைத் தேடி வீட்டிற்கே ஒரு ரசிகர் வந்ததாகவும் கீர்த்தி தெரிவித்துள்ளார்.

கணவராக பேசிய ரசிகர்: அந்த ரசிகர் வந்தபோது, தான் வீட்டில் இல்லையென்றும் தொடர்ந்து வேலையாட்களிடம் ஏன் கீர்த்தி இந்தப் படமெல்லாம் பண்றா, அப்படீன்னு அந்த ரசிகர்கள் கேட்டதாகவும் அவரின் மனைவியாகவே தன்னை நினைத்து அவர் உரிமையுடன் பேசியதாகவும் கீர்த்தி தன்னுடைய பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற ஏராளமான ரசிகர்களை தான் தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாகவும் கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்தியுள்ளார். படங்களில் மட்டுமில்லாமல் வெப் தொடர்களிலும் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ். அடுத்ததாக ராதிகா ஆப்தேவுடன் இணைந்து அக்கா என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X