Keerthi suresh: தோசை சைக்கோவாக மாறிய கீர்த்தி சுரேஷ்.. என்னது தோசைக்கு இது சைட் டிஷ்ஷா?

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் மட்டுமில்லாமல் தற்போது இந்தி படத்திலும் என்ட்ரி கொடுத்துள்ளார். தெறி படத்தின் நடிகை சமந்தாவின் கேரக்டரில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் தமிழில் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையும் பெற்றது.

முன்னதாக ரகு தாத்தா படத்திற்காக அடுத்தடுத்த பிரமோஷன்களில் கீர்த்தி சுரேஷ் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் அவருக்கு பிடித்தமான தென்னிந்திய உணவு குறித்து அவர் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இந்த விஷயத்தை காட்டிலும் தோசைக்கு அவர் சொன்ன சைட் டிஷ்தான் அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைப்பதாக அமைந்திருந்தது.

Keerthi suresh tamil cinema

நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல தமிழ் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக உள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியிலும் படத்தில் நடித்துள்ளார். தெறி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள படத்தில் சமந்தா கேரக்டரில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ரகு தாத்தா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

கீர்த்திக்கு பிடித்த உணவு: அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ்க்கு பிடித்த தென்னிந்திய உணவு குறித்து அவர் தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அவருக்கு தோசை மட்டுமே மிகவும் பிடித்தமான டிஷ் என அவர் கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷ் கேரளாவை சேர்ந்தவராக இருந்த போதிலும் அவருக்கு புட்டு உள்ளிட்ட எந்த ஐட்டமும் பிடிக்காதாம். மாறாக அவருக்கு தோசை மட்டுமே மிகவும் பிடித்தமான உணவு என்று அவர் கூறியுள்ளார். தோசைக்கு சைட் டிஷ்ஷாக சாம்பார், சட்னி எதுவாக இருந்தாலும் செட்டாகும் என்று கீர்த்தி கூறியுள்ளார்.

தோசைக்கு சைட்டிஷ்: வத்த குழம்பு உள்ளிட்டவற்றையும் தோசைக்கு சைட்டிஷ்ஷாக தான் சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இதனிடையே தோசைக்கு ரசத்தை சைடிஷ்ஷாக வைத்தும் சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி, அவரைப் பேட்டி எடுத்த ஆங்கரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சாமி படத்தில் சியான் விக்ரம் போல ரசத்தை சைட்டிஷ்ஷாக்கி கீர்த்தி சுரேஷ் சாப்பிடுவாரா என அவர் கேள்வி எழுப்ப, இதனால் கடுப்பாகி விட்டார் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து தன்னை இப்படி கலாய்க்க கூடாது என்று அவர் கூறியதையும் அந்த பேட்டியில் பார்க்க முடிந்தது.

கைக்கொடுக்காத ரகு தாத்தா: அடுத்தடுத்து ரஜினியுடன் அண்ணாத்த, உதயநிதியுடன் மாமன்னன், ஜெயம்ரவியுடன் சைரன் உள்ளிட்ட படங்கள் கீர்த்தி நடிப்பில் வெளியான நிலையில், இவை அவருக்கு சரியாக கைக்கொடுக்கவில்லை. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ரகு தாத்தா படமும் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்தடுத்து கீர்த்தி நடிப்பில் ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்தப் படங்கள் அவருக்கு வெற்றியை பெற்றுத்தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X