Keerthi Suresh: சமந்தாவை ரீபிளேஸ் செய்ய நான் கொஞ்சம்கூட பயப்படல.. போல்டாக பேசிய கீர்த்தி சுரேஷ்!

மும்பை: நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள பேபி ஜான் படம் இன்னும் சில தினங்களில் டிசம்பர் 25ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. காலீஸ் இயக்கத்தில் இந்த படத்தை இயக்குநர் அட்லி தயாரித்துள்ளார். இதன் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.

பேபி ஜான் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் மிகச் சிறப்பாக நடந்து வரும் நிலையில் படம் குறித்தும் தன்னுடைய கேரக்டர் குறித்தும் கீர்த்தி சுரேஷ் உற்சாகம் தெரிவித்துள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழில் விஜய், சமந்தா லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான தெறி படத்தின் ரீமேக்காக பேபி ஜான் படம் உருவாகி உள்ளது.

keerthi suresh baby john movie samantha

பேபி ஜான் படம்: பாலிவுட்டில் நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள பேபி ஜான் படம் வரும் டிசம்பர் 25ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த இயக்குநர் அட்லி, பேபி ஜான் படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். முன்னதாக ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இவர் கடந்த ஆண்டில் இயக்கியிருந்தார். இதன் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படம் 1100 கோடிகளுக்கு மேல் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் வசூலித்த நிலையில் மிகப்பெரிய இயக்குநராக மாறியுள்ளார் அட்லி.

தயாரிப்பாளர் அட்லி: அடுத்ததாக சல்மான் கானை லீட் கேரக்டரில் வைத்து அட்லி படமியக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது, இந்நிலையில் பேபி ஜான் படத்தை இவர் தயாரித்துள்ளார். இந்த படம் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான தெறி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. பேபி ஜான் படம்தெறி படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டாலும் முழுமையான ரீமேக் இல்லை என்று முன்னதாக அட்லி தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தி ரசிகர்களின் ரசனையை கருத்தில் கொண்டு இந்த படத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் தெறி படத்தின் ரீமேக்கை எதிர்பார்த்து வந்தால் ஏமாற்றமே ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் உற்சாகம்: பேபி ஜான் படத்தை காலீஸ் இயக்கியுள்ள நிலையில் படத்தில் சமந்தா கேரக்டரில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன்கள் மிகவும் ஜரூராக நடந்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையிலும் படத்தின் ப்ரோமோஷன்களில் அடுத்தடுத்து கீர்த்தி சுரேஷ் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பேசியுள்ள கீர்த்தி சுரேஷ், தெறி படத்தை தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பேபி ஜான் படம் உருவாகியுள்ளதாகவும் அதனால் இந்த படம் காலத்திற்கும் மொழிக்கும் ஏற்ப அதிக மாற்றங்களை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சமந்தாவிற்கு பாராட்டு: தமிழ் ரசிகர்களை கவர்ந்த அனைத்து விஷயங்களும் இந்தி ரசிகர்களையும் கவர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ள கீர்த்தி சுரேஷ், இந்தி ரசிகர்களுக்கு ஏற்ப படத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழில் தெறி படத்தில் சமந்தாவின் கேரக்டரை தான் ஏற்று செய்துள்ளதாகவும் அந்த கேரக்டர் மிகவும் அழகானது என்றும் குறிப்பிட்டுள்ள கீர்த்தி சுரேஷ், தெறி படத்தில் அந்த கேரக்டரை சமந்தா மிகவும் சிறப்பாக செய்திருந்ததாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிறிதும் பயப்படவில்லை: இது போன்ற ரீமேக் படங்களில் ஒரு கேரக்டரை ரீபிளேஸ் செய்வது மிகவும் சவாலானது என்றும் ஆனால் சமந்தாவின் கேரக்டரை ஏற்று நடிக்க தான் சிறிதும் பயப்படவில்லை என்றும் கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் தன்னுடைய கேரக்டரும் மிகவும் அழகாக வந்துள்ளதாகவும் தான் இந்த படத்தை மிகப்பெரிய நம்பிக்கையுடன் பார்த்து வருவதாகவும் கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளார். அவர் அடுத்தடுத்து வருண் தவான், வாமிகா கபி உள்ளிட்டவர்களுடனும் தனியாகவும் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X