Actress Keerthi suresh: கேரளாவில் 40 நாட்கள் வனவாசம்.. நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த விஷயம்!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக பாலிவுட்டிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தெறி படத்தின் ரீமேக்கில் நடிக்க தற்போது கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியுள்ளார்.
இவரது நடிப்பில் தமிழில் அடுத்தடுத்து ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த சைரன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது அக்கா என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருந்த சைரன் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கீர்த்தி சுரேஷின் கேரக்டர் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.
அக்கா வெப் தொடர்: இந்நிலையில் அக்கா என்ற வெப்து தொடரில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தர்மராஜ் செட்டி இயக்கிவரும் இந்த தொடரில் கபாலி படத்தில் நடித்திருந்த ராதிகா ஆப்தேவும் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த 40 நாட்களுக்கும் மேலாக கேரளாவில் நடந்து முடிந்துள்ளது. மிகவும் கடினமான இந்த சூட்டிங் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் க்யூட் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார் கீர்த்தி. கேரளாவில் தன்னுடைய வனவாசம் முடிந்து 40 நாட்கள் படப்பிடிப்பிற்கு பிறகு தற்போது மீண்டும் சோசியல் மீடியாவில் திரும்பி உள்ளதாக கீர்த்தி சுரேஷ் இந்தப்பதிவில் தெரிவித்துள்ளார்.
கைகொடுத்த மிஸ் மழை: அற்புதமான மற்றும் கடினமான படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் தன்னுடைய அடுத்தப்படங்களின் சூட்டிங்கிற்காக காத்திருக்க முடியவில்லை என்றும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். வெயிலின் சூட்டை தணிக்க மிஸ் மழையும் வந்து ஆச்சரியப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் இணைவோம் என்றும் கூறியுள்ள கீர்த்தி சுரேஷ், மழையுடன் சூடான காபியின் வீடியோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னணி நடிகை: நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் தங்கையாக அண்ணாத்த படத்திலும் நடித்து வரவேற்பை பெற்றிருந்தார். தொடர்ந்து மற்ற மொழிகளிலும் சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மலையாளத்தில் நடிப்பில் மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











