விடாமல் பின்னால் சுற்றி சுற்றி வரும் நைகி.. தெறித்து ஓடிய கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ!

சென்னை : கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக தனது தந்தையின் தயாரிப்பில் வாஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பெண்குயின், மிஸ் இந்தியா போன்ற படங்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள குட்லக் சகி படம் வரும் ஜூன் மாதம் ரிலீசாக உள்ளது.

செல்லப்பிராணிகளின் மீது மிகவும் அன்பு கொண்ட கீர்த்தி சுரேஷை நைகி என்ற செல்ல நாய்க்குட்டி விடாமல் துரத்த வைத்து தெறித்து ஓடும் வீடியோ இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஹீரோக்களுடன் ஜோடி

ஹீரோக்களுடன் ஜோடி

தமிழ்,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து இந்தியிலும் கீர்த்தி சுரேஷ் அறிமுகமாக இருக்க அந்த படத்தில் இருந்து காரணங்களால் நீக்கப்பட்டார் என கூறப்படுகிறது. மகாநடி மாபெரும் வெற்றி பெற்றதால் ஹீரோக்களுடன் ஜோடி போடும் படங்களில் மட்டுமல்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஜூன் 3

ஜூன் 3

அந்த வகையில் வெளியான பெண்குயின் மற்றும் மிஸ் இந்தியா போன்ற படங்கள் சுமாரான வெற்றி பெற்றதை தொடர்ந்து குட்லக் சகி வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் ஆதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

அண்ணாத்த

அண்ணாத்த

கொரானா அச்சம் காரணமாக மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்து வரும் சர்காரு வாரி பாட்ட படப்பிடிப்பு லண்டனில் நடத்தப்பட இருந்து பின் துபாய்க்கு மாற்றப்பட்டது. துபாயில் அதன் படப்பிடிப்பும் கடந்த சில மாதங்களாகவே முழுவீச்சில் நடைபெற்று வர மீண்டும் கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த திரைப்படத்தில் எப்போது நடிப்பார் என்ற அப்டேட்டை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

நைகி விடாமல் துரத்த

நைகி விடாமல் துரத்த

செல்லப் பிராணிகளின் மீது மிகவும் அன்பு கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் வீட்டில் நைகி என்ற குட்டி பப்பியை வளர்த்து வர, அதனுடன் எடுத்துக் கொண்ட பல க்யூட் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஏற்கனவே வைரல் ஆன நிலையில் இப்பொழுது மற்றுமொரு வீடியோ இணையதளத்தை கலக்கி வருகிறது. அதில் கீர்த்தி சுரேஷ் கேரளா சேலையில் வீட்டில் அறையில் நடந்து போக நைகி அவரின் முந்தானையை பிடித்து இழுத்து சுட்டித்தனமான சேட்டை செய்து விடாமல் துரத்த தெறித்து ஓடும் இந்த க்யூட் வீடியோ இப்பொழுது பல லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X