Keerthi: கண்ணோடு கண்சேர்த்து.. கையோடு கை கோர்த்து.. திருமண புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு, மலையாள மொழி படங்களில் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் ரகு தாத்தா மற்றும் பேபி ஜான் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. திருமணம் ஆகி சில தினங்களிலேயே பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன்களில் புத்தம் புதிய தாலியுடன் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கீர்த்தி சுரேஷ் -ஆண்டனி தாட்டில் திருமணம் கோவாவில் வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணத்தின் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ். தெலுங்கு. மலையாள மொழிப் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ரகு தாத்தா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. முன்னதாக மாமன்னன், சைரன் உள்ளிட்ட படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தன. அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா படம் தமிழில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பேபி ஜான் படம்: கடந்த ஆண்டின் இறுதியில் அட்லி தயாரிப்பில் பாலிவுட்டில் வெளியான பேபி ஜான் படத்தில் லீட் கேரக்டரில் வருண் தவானுடன் இணைந்து நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். கடந்த ஆண்டு இறுதியில் கீர்த்தி சுரேஷுக்கும் அவரது நீண்ட நாள் காதலர் ஆண்டனி தாட்டிலுக்கும் கோவாவில் வெகு விமரிசையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்கள் இருவரும் 15 ஆண்டு காலங்களாக காதலித்து வந்த நிலையில் இருதரப்பு பெற்றோர் சம்பந்தத்துடன் இவர்கள் திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. இந்த திருமணத்தில் நடிகர் விஜய், திரிஷா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

கீர்த்தி சுரேஷ் -ஆண்டனி தாட்டில் திருமணம்: இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் முன்னதாக தன்னுடைய திருமண புகைப்படங்கள் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் தற்போது கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணத்தின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மிகவும் அழகாக இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. கண்களோடு கண்கள் சேர்த்தும் கைகளோடு கைகள் கோர்த்தும் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தாட்டில் இந்த புகைப்படங்களில் நெருக்கம் காட்டியுள்ளனர். இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து இவர்களின் புகைப்படங்களுக்கு அதிகமான லைக்ஸ்களை கொடுத்து வருகின்றனர்.

திருமண புகைப்படங்கள்: இந்த புகைப்படங்களில் வெள்ளை நிற உடையில் தேவதையாக காணப்படுகிறார் கீர்த்தி சுரேஷ். ஆண்டனியும் அவரது அழகுக்கு ஈடு செய்யும்வகையில் வெள்ளை நிற கோட் சூட்டில் சிறப்பாக இருக்கிறார். இவர்களின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முறைப்படி நடந்த திருமண பகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். தன்னுடைய திருமண புடவையாக தன்னுடைய அம்மாவின் திருமண புடவையையே இவர் அணிந்திருந்தார். காலங்கள் கடந்த நிலையிலும் இந்த புடவை மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.


Click it and Unblock the Notifications











