கீர்த்தி சுரேஷிற்காக வருத்தப்பட்ட ரசிகர்கள்.. என்ன காரணம்னு தெரியுமா?

சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான இவரது சாணிக்காயிதம் மற்றும் சர்க்காரு வாரி பட்டா படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

இந்நிலையில் அடுத்ததாக தமிழில் மாமன்னன் படத்தில் இவர் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாகியுள்ளார் கீர்த்தி.

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ், அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் தமிழில் சாணிக் காயிதம் தெலுங்கில் சர்க்காரு வாரி பட்டா ஆகிய படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றன. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த சாணிக்காயிதம் படத்தில் பொன்னி என்ற கேரக்டரில் மிரட்டியிருந்தார்.

பொன்னி கேரக்டர்

பொன்னி கேரக்டர்

ஆதிக்க வர்க்கத்தின் அசுரப்பசிக்கு தன்னுடைய கணவன், குழந்தை மற்றும் மானத்தை பறிகொடுத்த பொன்னி, அதற்காக அவர்களை பழிவாங்குவதாக இந்தப் படத்தின் கதைக்களம் காணப்பட்டது. இந்த கேரக்டரில் அதீத உணர்ச்சியை பதிவு செய்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

சர்க்காரு வாரி பட்டா படம்

சர்க்காரு வாரி பட்டா படம்

இந்நிலையில் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இவர் இணைந்து நடித்திருந்த சர்க்காரு வாரிப் பட்டா படத்திலும் இவர் தன்னுடைய சிறப்பான நடிப்பு மற்றும் நடனத்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்தால் மட்டும் பட வாய்ப்புகளை பெற முடியாது என்பதை உணர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ், கவர்ச்சிக்கும் தாவியுள்ளார்.

உதயநிதியுடன் மாமன்னன் படம்

உதயநிதியுடன் மாமன்னன் படம்

இந்நிலையில் அடுத்ததாக தமிழில் உதயநிதியுடன் இணைந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் மாமன்னன் படத்திலும் இவர் இணைந்துள்ளார். இந்தப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் வடிவேலுவும் இணைந்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் கீர்த்தி சுரேஷ். இவரது சமீபத்திய போட்டோஷுட்டில் உடலை இறுக்கியபடியான உடையில் இவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களில் இவர் மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார். இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களது வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.

ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை

நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என்று இருந்தார் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து இவருக்கு பாலிவுட் வாய்ப்பும் வீட்டுக் கதவை தட்டியது. அதனாலோ என்னவோ தன்னுடைய உடலைக் குறைத்துக் கொண்டார். இதனால் இவரது முகமும் ஒல்லியாக காணப்படுகிறது. இதனிடையே மீண்டும் பழையபடி மாறுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X