Keerthi suresh :இருக்க இருக்க கவர்ச்சியை ஏத்திக்கிட்டே போறாங்களே கீர்த்தி சுரேஷ்.. க்யூட் போட்டோஸ்!
கொச்சி : நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்த தென்னிந்திய மொழிப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழில் மாமன்னன் படம் ரிலீசாகவுள்ளது.
தமிழில் இவரது நடிப்பில் உருவாகிவந்த ரகு தாத்தா படத்தின் படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது. இந்த நிறைவை கேக் வெட்டி சமீபத்தில் படக்குழுவினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்தப் படம் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகியுள்ளது. நிலத்தின் அடையாளத்தை மீட்பதற்காக போராடும் பெண்ணின் வாழ்க்கையை இந்தப் படம் கூறுவதாக அமைந்துள்ளது.

கீர்த்தி சுரேஷின் கவர்ச்சி புகைப்படங்கள் :
நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்த தென்னிந்திய மொழிப் படங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு நடித்துள்ள மாமன்னன் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் கீர்த்தியின் நடிப்பு மிகுந்த வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் கீர்த்தி. இவரது நடிப்பில் உருவாகிவந்த ரகு தாத்தா படத்தின் சூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிறைவை சமீபத்தில் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் கீர்த்தி சுரேஷ். நிலத்தின் அடையாளத்தை மீட்பதற்காக போராடும் பெண்ணின் வாழ்க்கையை இந்தப் படம் கூறுவதாக அமைந்துள்ளதாகவும் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். முன்னதாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணிக்காயிதம், அண்ணாத்த படங்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷிற்கு தென்னிந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். சமீபத்தில் இவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நிலையில், இவரை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்துக் கொண்டனர். இதனால் அவரை மீட்டு தனியாக பேட்டரி காரில் பாதுகாப்பு ஊழியர்கள் அனுப்பி வைத்தனர். இதனால் அந்த இடத்தில் அதிகமாக பரபரப்பு காணப்பட்டது. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் கீர்த்தி சுரேஷ்.
தொடர்ந்து தான் சுற்றுலா செல்லும் இடங்கள், போட்டோஷுட் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இவரது பிட்னஸ் வீடியோக்களும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று ஏராளமான லைக்ஸ்களையும் பெற்று வருகின்றன. தன்னுடைய நடிப்பில் வெளியாகும் படங்களின் அப்டேட்களையும் இவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதையடுத்து இவரை இன்ஸ்டாகிராமில் 15.4 மில்லியன் பேர் பாலோ செய்து வருகின்றனர்.

இதனிடையே, கவர்ச்சி ரூட்டிற்கு தன்னை மாற்றிக் கொண்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து மகாநடி உள்ளிட்ட பல படங்களில் இவரை ஹோம்லி லுக்கிலேயே பார்த்த ரசிகர்கள், தற்போது இவரது அடுத்தடுத்த கவர்ச்சி போட்டோஷுட்களால் திணறி வருகின்றனர். தற்போது தன்னடைய தோழியின் திருமணத்திற்கு பாரம்பரியமும் நவீனமும் கலந்து கீர்த்தி அணிந்துள்ள உடை, அனைவரையும் கவர்ந்து ஏராளமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











