Baby john: பாலிவுட் நடிகைகளுக்கு போட்டியாக ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்.. பேபி ஜான் பாடலில் தாராளம்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல ஹிட் படங்களை கொடுத்தவர். மகா நடி படத்திற்காக இவர் தேசிய விருதை பெற்ற நிலையில் தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் பாலிவுட்டிலும் அட்லி தயாரிப்பில் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். பேபி ஜான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் வருண் தவானுடன் கீர்த்தி சுரேஷ் ஆட்டம் போட்டுள்ள பாடல் தற்போது ரிலீசாகியுள்ளது.

keerthi suresh varun dhawan baby john movie

நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது பாலிவுட்டிலும் அவர் என்ட்ரி கொடுத்துள்ளார். பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள பேபி ஜான் படம் வரும் டிசம்பர் 25ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படம் விஜய்யின் தெறி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. பேபி ஜான் படத்தை பிரபல இயக்குநர் அட்லி தயாரித்துள்ள நிலையில் காலிஸ் இயக்கியுள்ளார்.

பேபி ஜான் பட பாடல்: விஜய், சமந்தா உள்ளிட்டவர்கள் நடித்து வெளியான தெறி படம் மிகச் சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் வசூலையும் குவித்திருந்தது. அட்லி இந்தப்படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் பாலிவுட்டில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார் அட்லி. தெறி போன்று ரசிகர்களை பேபி ஜான் படம் கவருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில் இந்த படத்தில் வருண் தவானுடன் கீர்த்தி சுரேஷ் ஆட்டம் போட்டுள்ள பாடல் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் மிகப்பெரிய அளவில் தாராளம் காட்டியுள்ளார் கீர்த்தி சுரேஷ். வருண் தவானுடன் இணைந்து அவர் இந்த பாடலில் மிகவும் கவர்ச்சியாக டான்ஸ் ஆடியுள்ளார்.

வருண் தவான் -கீர்த்தி சுரேஷ் ஆட்டம்: பாடலில் வருண் தவானுடனான கீர்த்தி சுரேஷின் கெமிஸ்ட்ரி மிக சிறப்பாக பார்க்கப்பட்டுள்ளது. தமிழில் அடுத்தடுத்து பைரவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், ஹோம்லி லுக்கில் வலம்வந்தார். அவருடைய முக அமைப்பிற்கு அது சிறப்பாகவே அமைந்தது. இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷ், உடையில் தாராளம் காட்டி ஆட்டம் போட்டுள்ளார். இதையடுதது சமூக வலைதளங்களில் அவர் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளார். வரும் டிசம்பர் மாதம் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது பாலிவுட்டில் அவர் மிகவும் தாராளமாக நடித்துள்ளது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாலிவுட் என்ட்ரி: தமிழில் அடுத்தடுத்து வெளியான கீர்த்தி சுரேஷின் சைரன், ரகு தாத்தா படங்கள் அவருக்கு சொதப்பலாக அமைந்தன. இதையடுத்து அவரது நடிப்பில் ரிவால்வர் ரீட்டா படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷ், தான் பாலிவுட் நடிகைகளுக்கு எந்தவகையிலும் சளைத்தவர் இல்லை என்பதை தற்போது நிரூபித்துள்ளார். மிகவும் கவர்ச்சியான உடைகளில் அவர் இந்தப் பாடலில் ரசிகர்களை கவரும் வகையில் ஆட்டம் போட்டுள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்தப் பாடல் ஏராளமான வியூஸ்களை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X