குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ்.. செல்பி எடுக்க குவிந்த ரசிகர்கள்!
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தனது க்யூட்டான அழகாலும், வசீகரமான சிரிப்பாலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ளார்.

சாணிக்காயிதம் :
கதாநாயகியாக ஹீரோக்களுடன் ஜோடி போட்டு ஆடிவந்த நடிகை கீர்த்தி சுரேஷ், கதாநாயகிகளுக்கு முக்கியத்தும் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் செல்வராகவனுடன் இணைந்து சாணிக்காகிதம் படத்தில் லீட்ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்த படம் நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியானது. இதில், பொன்னி என்ற மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தசராவில் கலக்கினார் :
மேலும், கடந்த மாதம் தெலுங்கு படமான தசராவில் நானிக்கு ஜோடியாக வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் மக்களின் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று தந்தது. இருப்பினும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் பொருந்தவில்லை என்று ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை கிண்டலடித்தனர்.
ரகு தாத்தா :
தற்போது, கீர்த்தி சுரேஷ், பேமிலி மேன் என்ற இணையத் தொடரரை இயக்கிய சுமன் குமார் எழுதி இயக்கியிருக்கும் 'ரகு தாத்தா' படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார். இதில், எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டடி இருந்தனர்.

திருப்பதியில் :
ரகு தாத்தா படப்பிடிப்பை முடித்தக் கையோடு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்தினருடன் திருப்பதி எழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். ஏழுமலையானை வழிபட்டுவிட்ட வந்த கீர்த்தி சுரேஷ், கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டார். பிரகாசத்தில் நடந்து வந்த கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்க முயன்றதால், திருப்பதி கோவில் காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி கீர்த்தி சுரேஷை பேட்ரி காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


Click it and Unblock the Notifications











