Rivolver Rita: Fun.. Fun.. Fun.. கீர்த்தி சுரேஷுடன் மகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்ட ராதிகா!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருகிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமல்லாமல் இந்தியிலும் தற்போது தெறி படத்தின் ரீமேக்கில் அவர் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் வருண் தவானுடன் இணைந்து அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரது நடிப்பில் ரகு தாத்தா மற்றும் ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.
மேலும் விஜய்யுடன் தளபதி 69 படத்திலும் கீர்த்தி சுரேஷ் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தில் சமந்தாவுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். தற்போது வருண் தவானுடன் இணைந்து தெறி பட ரீமேக்கிலும் கீர்த்தி சுரேஷ் நடிக்து வருகிறார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருந்த சைரன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அடுத்ததாக ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்கள் கீர்த்தி நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் ரிவால்வர் ரீட்டா படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அப்டேட் தெரிவித்துள்ளார்.
ரிவால்வர் ரீட்டா சூட்டிங் நிறைவு: இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சுனில், அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, ராதிகா சரத்குமார், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பிளேடு சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்ததையொட்டி நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்திருக்கும் வீடியோவை ராதிகா சரத்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கிலும் மிகுந்த உற்சாகமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். சிறப்பான டீம் மற்றும் சிறப்பான ஸ்கிரிப்ட் என்று கூறியுள்ள ராதிகா, மேலும் அதிகமான விஷயங்களை தான் கூறவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தா வெளியிட்ட போஸ்டர்: ரிவால்வர் ரீட்டா படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ள சூழலில் விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று பட குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சமந்தா, தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருந்தார் அந்தப் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விரைவில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தளபதி 69ல் கீர்த்தி சுரேஷ்?: அடுத்ததாக விஜய்யுடன் தளபதி 69 படத்திலும் கீர்த்தி சுரேஷ் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் என இரு நாயகிகள் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக பைரவா உள்ளிட்ட படங்களில் விஜய்யுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த ஜோடி ரசிகர்களை கவர்ந்ததாக அமைந்தது. இந்நிலையில் விஜய்யின் பைனல் படத்தில் கீர்த்தி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை கவரும்வகையில் உள்ளது.


Click it and Unblock the Notifications











