பிரபல சீரியல் நடிகைக்கு பாப்பா பொறந்தாச்சு… என்ன குழந்தை தெரியுமா ?
சென்னை : நந்தினி சீரியல் நடிகை கீர்த்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த தகவலை அவரின் கணவர் ஜெய் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இவர்களுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நந்தினி சீரியல்
சன் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக விறுவிறுப்பாக இருந்த தொடர் நந்தினி. இந்த தொடர் நாகினி சீனியலுக்கு போட்டி தொடர் போல இருக்கும். இதில், இந்த தொடரில் அனகோண்டா பாம்பு ஆள் உயரத்திற்கு எழுந்து நின்று மிரட்டும், மேலும், இத்தொடரில் தெய்வ நம்பிக்கை, மந்திரம், தந்திரம் என எபிசோடுக்கு எபிசோடு திகில் நிறைந்ததாக இருக்கும். இந்த தொடர் சன் தொலைக்காட்சியில் டி ஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இடம் பெற்று இருந்தது. இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

மாயா கதாபாத்திரத்தில்
இந்த தொடரை நடிகை குஷ்பு தயாரிக்க இயக்குனர் சுந்தர் சி கதை எழுதி இருந்தார் . இயக்குனர் ராஜ் கபூர் இத்தொடரை இயக்கி இருந்தார். இதில்,மூத்த நடிகர் விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், ராகுல் ரவி கதாநாயகனாகவும், நித்யா ராம், மாளவி வேல்ஸ் இருவரும் ஹீரோயினாக நடித்திருந்தனர். இதில் மாயா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை கீர்த்தி.

ஜெய் தனுஷ்
கீர்த்தி திருமுருகன் இயக்கத்தில் உருவான, கல்யாண பரிசு என்ற தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளத் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் ஜெய்தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரும் ஒரு நாடக நடிகர் தான் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா தொடரில் சஞ்சய் பரந்தாமன் என்னும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வளைகாப்பு
நடிகை கீர்த்தி கர்ப்பமான தகவலை இன்ஸ்டாகிராம் மூலம் தனது ரசிகர்களுக்கு தெரிவித்து இருந்தார். மேலும் , சமீபத்தில் இவர் வளைகாப்பில் எடுக்கப்பட்ட விதவிதமான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

ஆண் குழந்தை
கீர்த்தி ஜெய் தனுஷ் தம்பதிகளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜெய் தனுஷ், குட்டி பாப்பாவின் கையை உள்ளங்கைக்குள் வைத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











