செல்ல நாய்குட்டியுடன் க்யூட் போட்டோஷூட்..ப்ப்பா.. என்ன அழகு.. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!

சென்னை : கொரானா ஊரடங்குக்குப் பிறகு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தென்னிந்தியாவிலேயே அதிகம் ட்விட் செய்யப்பட்ட ஹீரோயின்களின் பெயரில் முதல் இடத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் அதற்காக அனைத்து மொழி ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்திருந்தார்.

உறவினரின் சங்கீத் நைட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் புஸுபுஸுவென செம க்யூட்டாக இருக்கும் செல்ல நாய்க்குட்டியுடன் எடுத்துக்கொண்ட க்யூட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களால் தாறுமாறாக வர்ணிக்கப்பட்டு வருகிறது.

சிறந்த நடிகையாக

சிறந்த நடிகையாக

தென்னிந்திய சினிமாவையே தனது கட்டுக்குள் வைத்து சிறந்த நடிகையாக பட்டையை கிளப்பி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் "மகாநடி" திரைப் படத்திற்கு தேசிய விருது பெற்றதை அடுத்து பெரும்பாலும் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார்.

லீட் ரோலில்

லீட் ரோலில்

பெண் குயின் திரைப்படம் இவரின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் இப்பொழுது மிஸ் இந்தியா திரைப்படத்தில் சோலோ பர்பாமன்ஸில் அதிரடி காட்டியுள்ள கீர்த்தி சுரேஷ் குட்லக் சகி என்ற மற்றொரு திரைப்படத்திலும் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

அதிக ட்வீட்

அதிக ட்வீட்

உலக அளவில் பிரபலமான சமூக வலைத்தளமாக கொண்டாடப்பட்டு வரும் ட்விட்டர் பக்கத்தில் தென்னிந்தியாவிலேயே அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகைகளின் பெயர் பட்டியலில் கீர்த்தி சுரேஷ் முதலிடத்தில் உள்ள நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அனைத்து மொழி ரசிகர்களுக்கும் தனது நன்றியை ட்விட்டர் மூலமாகவே தெரிவித்திருந்தார்.

முதன்முறையாக ஒன்றாக

முதன்முறையாக ஒன்றாக

இவ்வாறு ட்விட்டரால் கௌரவிக்கப்பட்ட சந்தோசத்தில் இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் அதே புத்துணர்ச்சியுடன் இப்பொழுது அண்ணாத்த படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார். இதில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா என நான்கு நாயகிகள் முதன்முறையாக ஒன்றாக இணைந்து நடித்து வருகின்றனர்.

வர்ணிக்க வார்த்தைகளே இல்லை

வர்ணிக்க வார்த்தைகளே இல்லை

படப்பிடிப்புகளில் ஒருபுறம் பம்பரமாக சுற்றி வரும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் உறவினர் ஒருவரின் சங்கீத் நைட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபொழுது புஸுபுஸுவென செம க்யூட்டாக இருக்கும் செல்ல நாய் குட்டியுடன் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இப்பொழுது வெளியிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷின் காஸ்டியூம் மற்றும் நாய்க்குட்டியின் கலரும் பார்க்க ஒரே மாதிரி உள்ள நிலையில் இருவரும் கொள்ளை அழகில் இருக்க யாரை வர்ணிப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் உங்களை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X