ஸ்பெயினில் சன் செட்டை கண்டு ரசிக்கும் கீர்த்தி சுரேஷ்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடித்ததை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு தங்கையாக போல ஷங்கர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

மகாநடி, பெண்குயின், மிஸ் இந்தியா உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக குட்லக் சகி திரைப்படம் கீர்த்தி சுரேஷுக்கு வெளியாக இருக்க இப்பொழுது ஸ்பெயின் நாட்டில் சன் செட்டை கண்டு ரசிக்கும் அழகிய புகைப்படத்தை தற்பொழுது பகிர்ந்துள்ளார் .

தங்கையாக அண்ணாத்த படத்தில்

தங்கையாக அண்ணாத்த படத்தில்

முன்னணி நடிகைகள் அவ்வளவு எளிதில் தங்கை கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டும் மலையாளம்,தெலுங்கு என தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் போதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க குடும்ப பின்னணியில் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள அண்ணாத்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருக்க கடந்த தீபாவளிக்கு வெளியானது. திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலைக் குவித்து வருகிறது.

ரசிகர்களுக்கு புது அனுபவத்தை

ரசிகர்களுக்கு புது அனுபவத்தை

இதுவரை முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக வந்து சென்ற கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் தங்கையாக நடித்திருப்பது ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்தது. தமிழில் நடித்த கையோடு தெலுங்கிலும் சிரஞ்சீவிக்கு தங்கையாக புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த வேதாளம் திரைப்படம் தெலுங்கில் போல ஷங்கர் என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க அவரது தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்

பழங்குடியின பெண்ணாக

பழங்குடியின பெண்ணாக

தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவரும் கீர்த்தி சுரேஷ் மகாநடி பெண் குயின், மிஸ் இந்தியா உள்ளிட்ட படங்களை தொடர்ந்து அடுத்ததாக குட்லக் சகி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பழங்குடியின பெண்ணாக நடிக்கிறார். மேலும் துப்பாக்கி சுடுவதில் திறமை மிக்கவராகவும் நடித்துள்ளார்.

ஸ்பெயினில் சன் செட்டை கண்டு ரசிக்கும்

ஸ்பெயினில் சன் செட்டை கண்டு ரசிக்கும்

தமிழ், மலையாளம்,தெலுங்கு என ரவுண்டு கட்டி நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் மகேஷ்பாபு ஜோடியாக சர்க்காரு வாரி பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தியா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஸ்பெயினுக்கு சென்ற இடத்தில் எடுத்த அழகிய புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். அதில் ஸ்பெயினில் மொட்டை மாடியில் நின்று கொண்டு சன் செட்டை கண்டு ரசிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X